மர்மமான முறையில் அடுத்தடுத்த மரணங்கள். காயம் தமிழ் திரைப்படம் குனசித்திர நடிகராக துரை ஆனந்த் அறிமுகம்.

மர்மமான முறையில் அடுத்தடுத்த மரணங்கள். காயம் தமிழ் திரைப்படம்


குனசித்திர நடிகராக துரை ஆனந்த் அறிமுகம். தமிழ்ச்செல்வன் என்பவர் இயக்கத்தில் வக்கீல் ராஜேந்திரன் அவர்களின் மாறா மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காயம்.


மர்மமான முறையில் அடுத்தடுத்து நடக்கும் மரணங்கள்.                    காயம்  படத்தில் ரிஸ்வன் கதாநாயகனாக நடிக்க ஜோதா, அனிஷா இருவரும் கதாநாயகியாகவும், குனச்சித்திர பாத்திரமேற்று சிவகங்கை துரை ஆனந்த் உடன் மேலும் படத்தில் பிக் பாஸ் சரவணன் நடித்துள்ளார். படத்தை தயாரித்துள்ள வக்கீல் ராஜேந்திரன் டாக்டராக நடித்துள்ளார்.


 நல்ல தம்பி  இசையமைக்க, சம்பத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ் ஆர் முத்துக்குமார் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

 மர்ம நபர் ஒருவரால் அடுத்தடுத்து நடக்கும் மரணங்களும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து கதைக்களம் அமைந்துள்ளது. ‌       காயம் திரைப்படத்தில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் மருத்துவர்கள் செய்த பணியைக் கூறியிருக்க.


கொரோனா தொற்று பரவலைப்  பயன்படுத்தி தவறு செய்த மருத்துவர்களையும் இந்தத் திரைப்படம் அடையாளப்படுத்தியது.

குணச்சித்திர வேடத்தில் சிவகங்கை நகர திமுகவின் செயலாளர் மற்றும் வார இதழ் ஆசிரியர் வெளியீட்டாளரெனப் பன்முகத் தன்மை கொண்ட துரை ஆனந்த் நடித்திருந்ததால் சிவகங்கை பகுதி மக்கள் ஆர்வமுடன் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்தனர்.


முன்னதாக குணச்சித்திர நடிகராக அறிமுகம் துரை ஆனந்திற்கு ரசிகர்கள் மாலை அணிவித்து திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வு பேசப்படுகிறது. முன்பே திகிலூட்டும் வகையில் வெளியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்ற நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகிறது. திமுகவின் சிவகங்கை மாவட்டத்தில் பொறுப்பிலிருந்து திரை மற்றும் சின்னத்திரை என பிரபலமான மூன்றாவது நபர் துரை ஆனந்த் ஆவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா