மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு ரூபாய் ஒரு இலட்சம் அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட  காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு ரூபாய் ஒரு இலட்சம் அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.


கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகில் குருசுவிளை கிராமத்தில் இராஜாசிங் மனைவி டெல்பின், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்: 

கன்னியாகுமரியில் மருத்துவக் கல்லுாரி துவக்க இருப்பதாக, 2012 ஆம் ஆண்டில் சிலர் என்னிடம் தெரிவித்து. 

இதற்காக, 'உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்; அதற்கு வட்டி வழங்கப்படும்; உரிய நேரத்தில் பணமும் திருப்பிக் கொடுக்கப்படும்' என்றதை நம்பி, மூன்று இலட்சம் ரூபாய் மற்றும் நிலத்தை நான் வழங்கினேன். அதன் பின்னர், என்னை அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்ததும்.

அது குறித்து, நாகர்கோவில் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தேன் ; 

நடவடிக்கையில்லை மேலும் நான் புகாரில் கூறியிருந்தவர்களின் துாண்டுதலில், கடந்த 2013 ஆம் ஆண்டில், கன்னியாகுமரி மாவட்டக் குற்றப்பிரிவு  சார்பு ஆய்வாளர் சாந்தி, என் வீட்டுக்கு வந்து என்னைத் தாக்கி, என் தலைமுடியைப் பிடித்து, ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றார்.

பின்னர், சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்தபின் விடுவித்தார். எனவே, எஸ்.ஐ., மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்த நிலையில்

மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் படியும் அந்தத் தொகையை, காவல்துறை சார்பு ஆய்வாளர் சாந்தியிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். 

மேலும், இலாக்காப் பூர்வமாக சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா