நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின்
ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.சக்தியின் தலை முடி விழுந்த இடமாக அதிசயங்கள் பல நிகழ்த்தும் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்
அரண்மனையும் அழகும் நிறைந்த மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் அமைந்துள்ள ஆலயம் அம்பிகை துர்கையின் அம்சம். மிகவும் சக்திவாய்ந்த அம்பிகை சாமுண்டீஸ்வரி என அழைக்கும். நூற்றாண்டு பல கடந்த நகரத்தை ஆண்டு வந்த மைசூர் அரசர்களுக்குதா தெய்வமாக விளங்கியது பற்றி குறிப்புகள் வரலாற்றிலுண்டு.
18 மஹா சக்தி பீடங்களுள் ஒன்றான ஸ்தலம். இந்தக் கோவிலை க்ரவுஞ்ச பீடம் என்றும் குறிப்பிடுவர். புராண காலத்தில் க்ரவுஞ்ச புரி என அழைக்கப்பட்டதையும், சக்தியின் தலை முடி விழுந்த இடம் என புராணம் கூறுகிறது.
12 ஆம் நூற்றாண்டில் ஹொய்சால அரசர்களால் கட்டப்பட்டிருக்கலாமெனவும் கோபுரம் 17 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்படிருக்கலாம் எனவும். 1659 ஆம் ஆண்டு 3000 அடி கொண்ட மலைக்கு ஆயிரம் படிகட்டுகள் வரை உருவாக்கப்பட்ட நிகழ்வு. கோவிலின் முக்கிய அம்சம் வீற்றிருக்கும் நந்தி. இந்த மலையின் ஏற்றத்தின் போது 700 ஆவது படிகட்டில், சிறிய சிவன் கோவிலுடன் கூடிய பிரமான்ட நந்தி சிலை உள்ளது. 15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தை சுற்றிய பெரிய மணிகளும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை விஷேச நாளாகும். இங்கு நிகழும் நவராத்திரி தசரா விழா உலக பிரசித்தி பெற்ற நிகழ்வின் போது இந்த கோவிலிலும், நகரத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர் மற்றொரு சிறப்பம்சம்,சாமுண்டி ஜெயந்தி விழா.
நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுவார். எழாம் நாளில் கால ஆரத்தி நிகழும். அப்போது மைசூர் மஹாராஜாவல் கொடையளிக்கப்பட்ட நகைகள் மாவட்ட பொக்கிஷக் கிடங்கிலிருந்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அலங்காரம் நிகழும்.
இந்த மலையின் அடிவாரத்தில் ஜுவாலமுகி திரிபுரசுந்தரி கோவில் உண்டு. இந்த அம்மன் சாமுண்டியின் சகோதரி என்றும், ரக்தபீஜ என்ற அரக்கனை வதம் செய்யும் போரில் சாமுண்டி தேவிக்கு துணை நின்ற தேவியார் தற்போது விழா மைசூர் நகரத்தில் கலைகட்டியுள்ளது . பிரதமர் அலுவலகம்காத்யாயினி அம்மனைப் பிரதமர் வணங்கினார்.
நவராத்திரியின் போது நமது சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணையை மேம்படுத்துவதற்காக பக்தர்களுக்கு காத்யாயினி அம்மன் ஆசீர்வாதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “காத்யாயினியை நான் வணங்குகிறேன். அம்மனின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கட்டும். அம்மனால் நம் சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை மேலும் அதிகரிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நவராத்திரியின் போது மா குஷ்மாந்தா மற்றும் மா ஸ்கந்தமாதாவுக்கு பிரதமரின் பிரார்த்தனைகள்
நவராத்திரியின் போது பக்தர்களுக்கு மா குஷ்மாந்தா மற்றும் மா ஸ்கந்தமாதா ஆகியோரின் ஆசீர்வாதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாடினார் மற்றும் தேவதைகளின் பிரார்த்தனையை (ஸ்துதி) பகிர்ந்துகொண்டார்.
‘நவராத்திரியின் போது ஸ்கந்தமாதா வழிபடப்படுகிறார். மா ஸ்கந்தமாதா தனது பக்தர்களுக்கு அனைத்து கஷ்டங்களையும் சமாளிக்க வலிமை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’’சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் அரண்மனையில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பரம்பரை அறங்காவலர் மேதகு இராணி D.S.K மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆலயத்தில் தசரா கலை இலக்கியப் பெருவிழா. ஒன்பது நாட்களும் நடக்கிறது. பத்தாம் தேதி நடைபெற்ற அலங்காரம் : ஸ்ரீ அன்னபூரணி மண்டகப்படிதார்கள் : தேவர் தெய்வீக பேரவையின் சார்பில் செய்யப்பட்டது சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் அமைந்துள்ள ."பேசும் தெய்வம்" ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாச நாதர் கோவில் அறங்காவலர்கள் வெங்கடாசலம் செட்டியார், காளைராஜா செட்டியார், தலைமையில், நவராத்திரி விழா தொடக்கி தினமும் நடைபெற்றது. இரண்டாம் நாள் நவராத்திரி விழா மண்டகப்படி ,உபயதாரர் கானாடுகாத்தான் சித.சரவணன் குடும்பத்தார் நிகழ்த்தும் சிறப்பு வாய்ந்த அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது கொத்தரி கீர்திகா மற்றும் நேமத்தான்பட்டி எம்.எஸ். மோகனமீனாட்சி ஆகியோர் இணைந்து இசையிலா வாய்ப்பாட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக அருணாச்சலம் செட்டியார் உபயதாரர் வழிபாடு நடந்தது. பேராசிரியர்.கவிஞர் பாகை இரா.கண்ணதாசன் நடுவராக பங்கேற்ற வழக்காடு மன்றத்தில்.
"அகத்திய சிவ ஸ்ரீ" ரமணி ஐயருடன் மதுரை இராமநாதன் வழக்கு தொடுத்து மறுத்தனர். "புராணங்கள் கற்பனையே என்பது குற்றம்" என்ற தலைப்பில் நடைபெற்றது .பின் தெய்வத் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. நான்காம் நாள் ஞானப்பால் ஊட்டும் அலங்காரத்துடன். கொலு வழிபாடு நடைபெற்றது. முனாதாக இல்லம் நிறைக்கும் இலக்குமி அருள்" தலைப்பில் பள்ளத்தூர் வித்யா லெட்சுமி ஆன்மீக சொற்பொழிவாற்றினார். ஐந்தாம் நாள் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கியது கானாடுகாத்தான் "சிவத் தொண்டர்" அண்ணாத்துரை அழகு ராமலிங்கம்,மற்றும் பெரியகோவில் இளமுருகனுக்கு வெங்கடா சலம் செட்டியார், பெரிய கோவில் சுபிரமணியனுக்கு பழையூர் சுப்பிரமணியன், பழையூர் ரவி அவர்களுக்கு ரமணி ஐயர், ஆகியோர் கதர் ஆடை அணிவித்து கௌரவித்தனர்.தொடர்ந்து கோவில் அர்ச்சகர் "அகத்திய சிவ ஸ்ரீ"ரமணி ஐயர் கொலு வழிபாடு நடத்தி கொலு விளக்கம் அளித்து சிறப்புற, நேர்த்தியாக, தீப ஆராதனை நடத்தினார்.
நாட்டார், நகரத்தார். உள்ளூர் பக்தர்கள் முன்னிலையில் கொலு வழிபாடு, நடைபெற்றது. நவராத்திரி விழா ஒருங்கிணைப்பு பணியில் பத்திரிகையாளர் நேமத்தான்பட்டி ஸ்ரீனிவாசன் சிறப்புடன் பங்களிப்பு செய்திருந்தார்
கருத்துகள்