குற்றவாளிக்கு சாதகமாகச் செயல்பட்டதாக கோயமுத்தூர் பெண் ஆய்வாளர் பணிநீக்கம்.

குற்றவாளிக்கு சாதகமாகச் செயல்பட்டதாக கோயமுத்தூர் பெண் ஆய்வாளர் பணிநீக்கம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத கோயமுத்தூர் காவல்துறை  ஆய்வாளர் பணி நீக்கம்


செய்யப்பட்டார். கோயமுத்தூர் மாவட்டத் தில் தீவிர குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் 

கலையரசி. கோயமுத்தூர் பொருளாதாரக் குற்றப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றிய போது மோசடி நிதி நிறுவனங்க ளின் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் 

உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை எனத் தெரிய வந்தது. மிகவும் கால தாமதமாக வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. சில வழக் குகளில் குற்றவாளிகள் எளிதில் தப்பும் வகையில் ஆய்வாளர்

கலையரசி சாதகமாக நடந்து கொண்டதாகப் புகார் செய்யப்பட்டது. தொடர்பாக  காவல்துறை 

உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் கோயமுத்தூர் சரக காவல்துறை டிஐஜி முத்துச்சாமி உத்தரவின் படி ஆய்வாளர் கலையரசி பணிநீக்கம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன் போக்ஸோ சட்டத்தின் கீழ்  குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்காக கலையரசிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. பாராட்டு பெற்ற ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்பட்டது  காவல்துறை 

வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா