நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் சிகிச்சை பெறுவதாக தகவல். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரைச் சந்தித்து மனைவியுடன் சென்று நன்றி தெரிவித்த பின் சென்னை திரும்பிய ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் படப்பிடிப்புகளில் பங்கேற்றார். மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.
டெல்லியில் இருந்து தற்போது விருது பெற்றுத் திரும்பிய நிலையில் தீபாவளியன்று வெளியாகும் அண்ணாத்த திரைப்படத்தை குடும்பத்தினருடன் பார்த்தவர் ரஜினியின் முரட்டுக்காளை படத்திற்குப் பிறகு
41 ஆண்டுகள் கழித்து இப்போது அண்ணாத்த திரைப்படத்தின் ட்ரெய்லரை காண்கிறோம் வயது 70 ஐத் தாண்டி கதாநாயகனாக
அண்ணாத்த படத்தில் முன்னணிக் கதாநாயகிகள் நால்வரில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் முரட்டுக்காளை வந்தபோது பிறந்திருக்கவில்லை.
ஒரு ஒப்பீடு. அதே கிராமப்புற சூழல். காளையன். கதாபாத்திரத்தில்
முரட்டுக்காளையில் நான்கு தம்பிகள். இதில் நான்கு கதாநாயகிகள்.
ரஜினி இன்னும் இளமையில் இருக்கிறாரா? திரைக்கதையில் புதுமைத்தனம் தெரிகிறதா? இதில் தர்மயுத்தம், முள்ளும் மலரும், முரட்டுக்காளை, சிவப்பு சூரியன் என பழைய தங்கச்சி சென்டிமென்ட் படங்களின் கலவையா?
படம்வெளிவந்து பார்த்தவர்கள் சொன்னால் தான் நமக்குத் தெரியும். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தாத்தா பேரன்களுடன் படம் பார்த்து விட்டு வந்து பதிவிட்டுள்ளார் சில மணி நேரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலம் பெற பல ரசிகர்கள் வேண்டுதல் செய்கின்றனர். நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம் என்று கூறினார். லேசான காய்ச்சல் இருந்ததால் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனை நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார் எனவும் கூறப்பட்ட நிலையில் ரஜினிகாந்த், அவசர சிகிச்சைப் பிரிவான ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் முதல்வர் அவர் நலம் பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார் மேலும் மருத்துவமனை சார்பில் வந்த புல்லட்டின் படி அவர் வழக்கமாக நடைபெறும் சோதனை இல்லை எனத் தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற திசுக்கள் சேதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும்.
கருத்துகள்