இலஞ்ச ஊழல் மற்றும் போக்ஸோ வழக்கில் பணிநீக்கமாகும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது: ஆணையம் பரிந்துரை

இலஞ்ச ஊழல் மற்றும் போக்ஸோ வழக்கில் பணிநீக்கமாகும்  அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது.


சட்டத் திருத்தம் கொண்டுவர அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை


போக்ஸோ மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு, பணிநீக்க காலத்திற்கான பிழைப்பு  ஊதியம் (சம்பளத்தில் ஒரு பகுதி) வழங்காமல் இருக்கும் வகையில், தமிழ்நாடு பிழைப்பூதியச் சட்டம் மற்றும் இதர பணியாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பேரூராட்சிகளின் ஆணை யத்திடம் ஆர் பெரியசாமி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன்படி மனுச் செய்து பேரூராட்சிகளில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் பணிநீக்கம் செய் யப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.    இதே போல், போக்ஸோவில் கைதானவர்கள் குறித்த தகவலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்திலும் கேள்வியாகக் கேட்ருந்தார்.
இந்த மனுவிற்கு சம்மந்தப்பட்ட துறை பொதுத் தகவல் அலுவலர்கள் சரியான பதில்கள் தரவில்லை அதனால் அதே அலுவலகத்தின் மேல்முறையீட்டு அலுவலரிடம் முதல் முறையீடு 30 நாள் முடிவில் செய்து அதற்கும் சரியான பதில் இல்லை , 90 நாள் முடிவில்  இரு அலுவலகம் சார்ந்த பொதுத் தகவல் அலுவலர் மீதும் மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்தனர். இந்தவழக்கு மாநிலத் தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு 2021 ஜூலை 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட இரு துறைகளின் பொதுத் தகவல் அதிகாரிகளும் ஆஜராகினர்
இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் அளித்துள்ள உத்தரவு: விபரம் வருமாறு.
இலஞ்ச ஊழல் வழக்குகளிலும், போக்ஸோ சட்டங்களின் கீழும் நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும்  காலத்தில் அவர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50 சதவீதம் ஊதியம் பிழைப்பூதியமாக   வழங்கப்ப டுகிறது. 90லிருந்து 180 நாட்கள் வரை அவர்களின் மாதச் சம்பளத்தில் 75 சதவீதமும், 180 நாட்களுக்கு பிறகு முழு ஊதியமும் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பணிநீக்கம் செய்யப்பட்ட குற்றவாளியான ஆசிரியர் ஒருவர் 6 ஆண்டுகள் பிழைப்பூதியம் வாங்கியுள்ளார். அந்தக் காலத்தில் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர் அதன் பிறகு அவருக்கு போக்ஸோ நீதிமன்றம் 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.  போக்ஸோ மற்றும் இலஞ்ச ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையில் காலதாமதம் ஏற்படுகிறது. துறை ரீதியிலாயான விசாரணையிலும்

காலதாமதம் ஏற்படுகிறது இந்தக் காலக்கட்டத்தில் நீதி மன்றம் மற்றும் துறை ரீதியான விசாரணைக்கு அரசு தான் செலவு செய்கிறது. இதுபோன்ற குற்றங்களில் பணிநீக்கம் செய்யப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் பிழைப்பூதியம் அரசுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்கள் மீது தொடரப்படும் குற்ற வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அவர்கள் மீது துறைரீதி யான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். இலஞ்ச ஊழல் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தவர்களுக்கு அவர்களின் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழ் நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற் றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மாநிலத்தில் அரசுக்கு இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது. இவ்வாறு அந்த இரு உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்