காமராஜர் துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு


கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021-ஐ முன்னிட்டு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் காமராஜர் துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில்,  இரு நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவரும், காமராஜர் துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு.சுனில் பாலிவால் ஐஏஎஸ், அனைவரும் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றார். லஞ்சம் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது மட்டும் நேர்மைக்கு அறிகுறி அல்ல என்று குறிப்பிட்ட அவர், தங்களது பணி மற்றும் பொறுப்புகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும் என்றார்.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் தென் பிராந்திய ஐஜி திருமதி அஞ்சனா சின்ஹா ஐபிஎஸ், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் செய்தி மடலான “கண்காணிப்புக் குரல்” என்ற நூலை வெளியிட்டார்.

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி திரு.எஸ்.முரளி கிருஷ்ணன், காமராஜர் துறைமுக தலைமை கண்காணிப்பு அதிகாரி திரு.ஜே.பிரதீப் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா