கீழடி ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி கீழடியில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
திருப்புவனம் அருகே கீழடி பகுதியில் 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணிகள் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் நடந்தன. இதில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை மத்தியத் தொல்லியல் துறையும், நான்காம் கட்டம் முதல் ஏழாம் கட்டம் வரை நடைபெற்ற அகழாய்வுப் பணிகளைத் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையும் மேற்கொண்டதில்
கீழடியில் செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு, தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், எடைக்கற்கள் உள்ளிட்ட பல ஆயிரம் பழமையான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டதன் மூலம் கீழடி நகர நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனத் தெரியவந்த நிலையில். ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதம் .30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததில் கண்டறியப்பட்ட பழமையான தொல் பொருட்களைப் பொதுமக்களை பார்வையிட, கொந்தகையில் ரூபாய்.12.21 கோடியில் கீழடி அகழ்வாராய்ச்சி வைப்பகம் கட்டும் பணி நடக்கிறது.
மேலும் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதியில் அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல் அப்படியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் நிலையில் கீழடியில் அகழாய்வு நடந்த குழிகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட தொல் பொருட்களை தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டவருக்குச் சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், அகழாய்வு பற்றி விளக்கிக் கூறினார்.
உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மூர்த்தி, கீதா ஜீவன், முதல்வரின் தனிச்செயலர் செயலர் உதயச்சந்திரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உள்ளிட்டோர் உடன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொந்தகையில் கட்டப்படும் கீழடி அகழ்வைப்பக கட்டுமானப் பணிகளை தமிழகத்தின் முதல்வர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் ஆய்வு செய்யாமல் மதுரைக்குப் புறப்பட்டார்.
கருத்துகள்