தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை அறிவிப்பும்,பயணிகள் இரயில் இயக்கமும்

 மதுரையிலிருந்து புறப்படும் பாண்டியன், மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு இரயில்களின் நேரத்தில் மாற்றம். தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை அமல்படுத்தப்படும் நிலையில்


தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை  அறிவிப்பு 

மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண் 02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7:05 மணிக்கும், திண்டுக்கல்லிலிருந்து காலை 8 மணிக்குப் பதிலாக காலை 8:05 மணிக்கும் புறப்பட்டு சென்னை சென்றடையும்.

சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (எண் 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 4:05, 4:18, 4:30 மணிக்குப் பதிலாக அதிகாலை 3:55, 4: 07, 4: 17 மணிக்குப் புறப்படும்.


பைசாபாத்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (எண் 06794) மதுரை ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1: 30 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12:40 மணிக்குப் புறப்படும்.

மதுரை-புனலூர் சிறப்பு ரயில் எண் 06729 மதுரையிலிருந்து இரவு 11: 30 மணிக்கு பதிலாக இரவு 11:25 மணிக்கு புறப்படும். இந்த இரயில் திருப்பரங்குன்றம், நெல்லை, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து  முறையாக இரவு 11:42, மற்றும் அதிகாலை 3:10, காலை 9 மணி, 9:11, மற்றும் 9:22, மற்றும் 9:30, 9:40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, முறையே இரவு 11:38, நள்ளிரவு 2:45, காலை 8:45, 8:55, 9:05, 9:15, 9:24 மணிக்குப் புறப்படும்.


மறு மார்க்கத்தில் புனலூர்-மதுரை சிறப்பு ரயில் (எண் 06730) திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3:45 மணிக்கு பதிலாக 3:40 மணிக்கு புறப்படுமெனத் தெற்கு இரயில்வேயின் மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதில் 

தூத்துக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 02694 ரயிலின் புறப்படும் நேரம் மாற்றம்  இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து  புறப்படும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு ரயில் புறப்படும் நேரமும், வந்து சேரும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டதன்படி, இரவு 7.30 மணிக்கு  சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி இரயில் நிலையம் வந்து சேரும்

எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 02661 எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் செங்கோட்டைக்கு வந்து சேரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காலை 8.15 மணிக்கு வந்து சேரும். மேலும் செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

கன்னியாகுமரியில் இருந்து எழும்பூருக்கு 02634 புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக, நெல்லை ரயில் நிலையத்துக்கு இரவு 7.15 மணிக்கு வந்தடையும். பின் நெல்லையிலிருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 6.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு 02633 புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இதே ரயில் நெல்லைக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து 3.50 மணிக்கு கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும்.

இதனிடையே தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை ஒரு நாளுக்கு முன்பு அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். 130 க்கும் மேற்பட்ட ரயில்களின் நேர மாற்றத்தை அவசர, அவசரமாக அறிவிப்பது ஏன்? முன்கூட்டியே ரயில்களின் நேரம் மாற்றம் குறித்துஅறிவிப்பு வெளியிட்டால் தான் பயணிகள் திட்டமிட்டுப் பயணிக்க முடியும் என்று கூறியுள்ளனர். விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு, ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் உள்ளிட்டவை குறித்து எதுவும் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரயில் முனையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் மற்றும் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் செல்போன்களுக்கு ரயில்களின் நேரம் மாற்றம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளோம். மேலும், நேரம் மாற்றம் குறித்து விபரங்களை ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போதிய ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ரயில் (வ.எண்.06654), வருகிற 7-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (வ.எண்.06655) மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ்மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்