ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்

ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கவும் திரு.மோடி ஒப்புதல் அளித்துள்ளார்

“ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், தாத்ரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த சோகமான தருணத்தில், உயிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை நான் தெரிவித்துக்கொள்கிறேன்

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்: PM @narendramodi

ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்து காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்: PM @narendramodi” என்று பிரதமர் அலுவலக டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா