மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான காலநிலை தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் உபகரணம் தொடங்கப்பட்டது
ஊரக வளர்ச்சி அமைச்சகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான காலநிலை தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் உபகரணம் தொடங்கப்பட்டது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புவிசார் தகவல் அமைப்பு சார்ந்த நீர்நிலை திட்டமிடலுக்கான பருவநிலை தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான காலநிலை தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் உபகரணம் இன்று தொடங்கப்பட்டது.
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் மற்றும் இங்கிலாந்து வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகத்தின் தெற்காசிய மற்றும் காமன்வெல்த் இணை அமைச்சர் லார்ட் தாரிக் அகமது ஆகியோர் இணைந்து காணொலி நிகழ்ச்சி ஒன்றில் இதை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு கிரிராஜ் சிங், பல்வேறு திட்டங்களில் பருவநிலையை எதிர்கொள்வதற்கான செயல்முறையை வழங்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
காலநிலை தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் உபகரணத்தின் செயல்படுத்தலின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் கிராமப்புற சமுதாயங்களுக்கு புதிய சாத்தியக்கூறுகள் திறந்து விடப்படும் என்று அவர் கூறினார்.
இத்திட்டத்திற்கான முன்னோட்டம் பிகார், சத்திஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் தொடங்கப்பட்டுள்ளது
கருத்துகள்