இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமான பொருட்களுக்கு கணிசமான உலகளாவிய தேவை உள்ளது: வர்த்தக இணை அமைச்சர் தகவல்

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்   இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமான பொருட்களுக்கு கணிசமான உலகளாவிய தேவை உள்ளது: வர்த்தக இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ்சர்வதேச கட்டுமான வன்பொருட்கள் விநியோக துறையில் 1.2 சதவிகித பங்களிப்புடன் முதல் 20 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ் கூறினார்.

ஈஈபிசி இந்தியா ஏற்பாடு செய்த கட்டுமான வன்பொருட்கள் கண்காட்சியில் (பில்டர் ஹார்ட்வேர் எக்ஸ்போ) உரையாற்றிய அவர், ​​இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமான பொருட்களுக்கு இன்று கணிசமான உலகளாவிய தேவை உள்ளதை குறிப்பிட்டார்.

இந்திய கட்டுமான வன்பொருள் தயாரிப்பு இந்திய பொறியியல் பொருட்கள் துறையில் சிறப்பாக செயல்படும் பிரிவுகளில் ஒன்றாகும்.

"இந்த தொழிற்துறையானது கட்டுமான உபகரணத் தொழிலுடன் இணைக்கப்பட்டுள்ளது, 2020-ம் ஆண்டில் இதன் வருவாய் 6.5 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது, மேலும் 2025 வாக்கில் உலகளவில் மூன்றாவது பெரியதாக கட்டுமான சந்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு பிபி ஸ்வைன் கூறினார்.

கட்டுமான வன்பொருள் தயாரிப்புகளை விநியோகிப்பதில் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது. இதன் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும் என்ற அரசின் லட்சியத்தை நிறைவேற்றும் பாதையில் நாடு உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்