முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் பா ஜ க வினர் புகுத்த நிலையில் கலவரம் துப்பாக்கிச் சூடு எட்டு பேர் பலி காங்கிரஸ் போராட்டம்

வேளாண்மைச் சட்டங்களுக்கெதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின்  போராட்டம் கலவரமாக மாறியதால் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


விவசாயிகளின் போராட்டத்தில் பாஜகவினர் நுழைந்தது தான்  இந்தக் கலவரத்திற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு நடத்தி வருகிற போராட்டம் பத்து மாதங்களாக நீடிக்கும் நிலையில்,


விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு புறக்கணிதத நிலையில் உத்திரபிரதேசத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து அம்மாநில விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லக்கிம்பூர் கெர்ரி  எனுமிடத்தில் உத்தரபிரதேச மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜகவினர் வருகை தந்திருந்தனர். அப்போது விவசாயிகள் பாஜக தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார், விவசாயிகள் மீது மோதியதால் ஏற்பட்ட வன்முறையில் எட்டு பேர் பலியாகினர்; வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.




உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. லக்கிம்பூர் மாவட்டம் பன்வீர்பூரில் நேற்று நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்பதாக இருந்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், கூட்டம் நடக்கும் இடத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஏராளமான விவசாயிகள் அந்த பகுதிக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.



அப்போது அந்த வழியாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் மோனு ஓட்டி வந்த கார், விவசாயிகள் மீது மோதியது.சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் பலியானதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மத்திய அமைச்சரின் மகனின் கார் உட்பட இரண்டு கார்களை தீ வைத்து எரித்தனர்.அத்துடன் அந்த வழியாக வந்த பல்வேறு வாகனங்களுக்கும் தீ வைத்த விவசாயிகள், கல் வீச்சிலும் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்த ஏராளமான விவசாயிகள் அங்கு குவிந்தனர்.முதலமைச்சருடன் வந்த 2 கார்கள் விவசாயிகள் இருந்த கூட்டத்திற்குள் கண்மூடித்தனமாக புகுந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்துப்போட்டுத் தாக்கினர், விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரிலிருந்த பாஜக தொண்டர்கள், ஓட்டுநரை அடித்துக் கொன்றனர். பின்னர் நடந்த போராட்டம் வன்முறையிக மாறியது, அதைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில் எட்டு பேர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது, அதைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் பாஜகவினர் 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

லக்கிம்பூர் வன்முறையின் போது தனது மகன் அங்கு இல்லை எனவும், அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதெனவும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு காங்கிரஸ் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது, தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர்  பதவி விலக வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தினர் அதில் கலந்து கொண்டு பேசிய கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதிவழியில்போராடும் விவசாயிகள் மீது மோடி அரசின் உள்துறை இணைஅமைச்சரின் மகன் கார் ஏற்றி மூன்று விவசாயிகளை படுகொலை செய்கிறான். கொலையாளி கைதுசெய்யவில்லை.ஆனால் விவசாயிகளுக்காகப் போராடும் பிரியங்கா காந்தி அவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

பிரியங்காகாந்தியின் கைது கடுமையான கண்டனத்துக்குரியது. விவசாயிகளைப் படுகொலைசெய்த பாஜக அமைச்சரின் மகனை உடனடியாக கைது செய்யவேண்டும். அமைச்சர் பதவிவிலக வேண்டும்.பிரியங்கா விடுதலை செய்யப்படவேண்டும்.மோடி அரசு எவ்வளவு அடக்குமுறையை ஏவினாலும் விவசாயிகளுக்காக காங்கிரஸ் களத்தில் நிற்கும். எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...