பாடலாசிரியர் பிறைசூடன் நம் தமிழ் மண்ணை விட்டுப் பிரிந்தார்.

பாடலாசிரியர் பிறைசூடன் நம் தமிழ் மண்ணை விட்டுப் பிரிந்தார்.


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நன்னிலம் பிறந்த சந்திரசேகரனாக வந்த கவிஞர் பிறைசூடன் 1984 ஆம் ஆண்டில் பரமக்குடி ஆர.சி.சக்தி இயக்கிய‘சிறை’ படத்துக்குப் பாட்டெழுதத் துவங்கிய அண்ணன் பிறைசூடன்,பின்னர் தொடர்ந்து திரையுலகில் இயங்கிக் கொண்டே இருந்தவர்.

திரைப்படத்திற்கு எழுதிய பாடல்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தொட்டிருக்கலாம், ஆனால் எழுதிய தனிப் மற்றும் பக்திப் பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும்.

முரளி நடித்த, ‘இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே’ பாடலும், ராஜ்கிரண் நடித்த ‘சோலப் பசுங்கிளியே’ வும் அடிக்கடி கேட்கும் பாடல்கள்… எளிமையின் அடையாளம். பக்குவமான பண்பு. எவரையும் மதிக்கும் மாண்பு. தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களை எழுதியுள்ளார். பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’பாடல் சிலகாலம் திருமண வீடுகளில் ஒலித்தது. செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’  உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ள பிறைசூடன், தற்போது வரை தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்து வந்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் அவர் இடம்பெற்ற செய்தியும் வெளியாகியிருந்த நிலையில் இன்று மாலை சுமார் 4.15 மணியளவில் தனது குடும்பத்த்னருடன் பேசிக்கொண்டிருந்த போது, பிறைசூடன் காலமானதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுச் செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   அவர் பாடல் மூலம் அவருக்கு அஞ்சலி                                   "நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும் இந்த நிலமும் அந்த வானமும்    அது எல்லோருக்கும் சொந்தம் -              அடிசொல்லடி ஞானப்பெண்ணே         உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா