உலக மனநல தினம் : பெங்களூரு நிம்ஹான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உலக மனநல தினம் : பெங்களூரு நிம்ஹான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்


உலக மனநல தினத்தை ஒட்டி பெங்களூரு நிம்ஹான்ஸில் (தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்) இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்.


நீரிழிவு போன்று மன ஆரோக்கியமும் ஒரு அமைதியான உயிர்கொல்லி என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது உரையில் எச்சரித்தார்: "கண்டறியப்படாமல் போகும் போது நீரிழிவு ஆபத்தாகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சமூக அச்சம் காரணமாக முன்வருவதில்லை," என்றார்.மனநல பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணியாக நமது வாழ்க்கை முறை மற்றும் குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்."மருத்துவமனைகளே இறுதி படியாகும். சக குடும்ப உறுப்பினர்களில் மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து பிரச்சினை மோசமடைவதற்கு முன்பு உதவியை நாடலாம். இதேபோல்,ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் நடத்தை மாற்றங்களைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் சிக்கலை தொடக்கத்திலேயே தடுக்கும்,” என்று அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா