திருப்புத்தூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்றம் (சப். கோர்ட்) அமைத்திட வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டம்              திருப்புத்தூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் அரசு வழக்கறிஞரான  பெ.கணேசன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற. கூட்டத்தில், பெரும்பாலான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். பலர் தங்கள் கருத்துக்களைக் கூறினார்.


திருப்புத்தூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இரண்டு ஆண்டு காலமாக நிரப்பப்படாமல் காலியாகவுள்ள நீதிபதி பணியிடத்தில், நீதிபதியை  நிரந்தரமாக நியமிக்கக் கேட்டும், நீதிமன்றத்தில் காலியாக உள்ள பிரதி எடுக்கும் ஸ்டெனோ  மற்றும் காலியாக உள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை உடனடியாக த் துவங்கிட வேண்டும், திருப்புத்தூர் நீதிமன்றத்திற்கு நீண்ட காலமாக ஜெராக்ஸ் மிஷின் பழுதானதை அகற்றி புதிய ஜெராக்ஸ் மிஷின் மற்றும் ஸ்டேஷனரி சாமான்களை வழங்கிட வேண்டும், திருப்புத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய இரண்டு தாலுகாக்களில் திருப்புத்தூர்,சிங்கம்புணரி, எஸ்.புதூர் அடங்கியுள்ள ஊராட்சி ஒன்றிய மக்கள் பயன்பெறும் வகையில்.  திருப்புத்தூரில் நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்றம் (சப். கோர்ட்) அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா