மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தேர்வு(II), 2020-ன் இறுதி முடிவு
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தேர்வு(II) 2020 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தேர்வு வாரியங்கள் நடத்திய நேர்காணல் அடிப்படையில் மெரிட் மூலம் தேர்வு செய்யப்பட்ட 141 ஆண்கள், 51 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெறும் பயிற்சிக்காக இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் இந்திய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி, விமானப்படை அகாடமி பரிந்துரைத்த நபர்களின் பட்டியலும் இதில் இடம் பெற்றுள்ளன
மெரிட் அடிப்படையிலான தேர்வில், விண்ணப்பதாரர்களின் மருத்துவ தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, இந்த தேர்வு தற்காலிகமானது.
இவர்களின் விவரங்களை யுபிஎஸ்சி இணையதளத்தில் http://www.upsc.gov.in. விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், இணையதளத்தில் இறுதி முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கிடைக்கும். இது 30 நாட்களுக்கு இருக்கும்.
கருத்துகள்