சென்னை விமான நிலைய சுங்கத்துறை 2.06 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது

2.06 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது சென்னை விமான நிலைய சுங்கத்துறை


உளவுத் தகவல் அடிப்படையில், எதிகாட் ஏர்வேஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமான பயணியிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.


அவரது உடமைகளை பரிசோதித்ததில், 4 தங்க வயர்கள், பைகளின் உலோக சட்டத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2.06 கிலோ தங்கம், சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.90.17 லட்சம். இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா