கர்நாடகாவில் வருமானவரித்துறை சோதனை: ரூ.70 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு

கர்நாடகாவில் வருமானவரித்துறை சோதனை: ரூ.70 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு


கர்நாடகாவில் சாலைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒரு முன்னணி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை கடந்த மாதம் 28ம் தேதி சோதனை நடத்தியது.


இதில் அந்த குழுமம் லாபத்தை மறைக்க, போலி ரசீதுகள் மூலம் பொருட்கள் வாங்கியதாகவும், துணை ஒப்பந்தகாரர்களுக்கு பணம் செலுத்தியதாகவும்  கணக்கு காட்டியுள்ளது. இதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஆராய்ந்ததில், கணக்கில் காட்டப்படாத பணத்தை, குழுமத்தை சேர்ந்த நபர்களே பொருட்களை அனுப்பியதாக பணம் பெற்றுள்னர். துணை ஒப்பந்தகாரர்கள் என்ற பெயரில் உறவினர்களே கணக்கில் காட்டப்படாத  பணத்தை பெற்றுள்ளனர்.


இந்த சோதனையில் ரூ.70 கோடிக்கும் மேற்பட்ட, கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா