ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குறித்து தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே சிறந்த வாதம்

தமிழகத்தின் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின்  மரணம் குறித்து  கடந்த கால ஆட்சியிலிருந்து அமைத்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை


விரிவாக்கத் தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல்நசீர் தலைமையிலான அமர்வில் நடைபெறுகிறது.

விசாரணையின்போது ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. தேவையில்லாமல் வழக்கு விசாரணைக்கு தங்களது மருத்துவர்களை அழைப்பதாக அப்பல்லோ நிர்வாகம் குற்றம் சாட்டிய நிலையில்

விசாரணைக் குழுவில் மருத்துவ நிபுணர்கள் இல்லை. மருத்துவர்கள் இல்லாத அந்த ஆணையத்தில் மருத்துவர்களை அழைத்து எப்படி விசாரிக்க முடியும் என்றும் தெரிவித்தது. 

இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ததில் 

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒரு நல்ல மருத்துவமனையாகும். ஒரு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மீது அவதூறு சொல்வதை ஏற்க இயலாது. ஆணையத்தின் செயல்பாட்டை அப்பல்லோ மருத்துவமனை தடுக்க நினைக்கிறது.

ஆணையம் என்பது உண்மையை கண்டறியும் குழுவே. நிபுணர் குழு அல்ல. நிபுணர்கள் குழுவில்தான் மருத்துவர்கள், நிபுணர்கள் இடம் பெற வேண்டும். ஆவணங்கள், ஆதாரங்களை திரட்டி அரசிடம் கொடுப்பதே ஆணையத்தின் பணியாகும். அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்குச் சொல்வது மிக மிக முக்கியம் ஆகும். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் விவரம் தெரிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்களை சேர்க்கவும் தயாராக இருக்கிறோம்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்கிறது.

என் அதில் கூறப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட இரு நபர் விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

 ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை மக்களுக்குச் செல்வது மிகவும் முக்கியமாவதால், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவாக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன்

ஆணையத்தை முற்றிலும் மாற்றுவதற்குத் தமிழக அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனையும் இல்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆட்சேபனையம் இல்லை எனும் பதிலை மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 95 சதம் விசாரணையை முடிந்துவிட்டதாகவும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளான பானுமதி, மற்றும்  சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட இரு நபர் ஆணையத்தை அமைக்கலாமென மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார்.


முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆணையம் உண்மை கண்டறியும் குழு தானே தவிர அது நிபுணர் குழு அல்ல என்று கூறியவர், அதில் மருத்துவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் மருத்துவர்கள் ஆணையத்துக்கு உதவும் வகையில் நியமிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார்.தமிழக அரசு தரப்பிலான வாதுரையில். செல்வி ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம். மருத்துவமனை தரப்பில் என்ன மருந்துகள் ஜெயலலிதாவிற்கு கொடுத்தது, என்ன சிகிச்சையை வழங்கியது போன்ற விவரங்கள் எல்லாம்  


  வெளிப்படையாக தெரியவேண்டும். அதை தான் ஆணையம் செய்து வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஓர் உண்மை கண்டறியும் ஆணையம். அதன் வேலை உண்மைத் தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான். ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க எந்த மறுப்பும் இல்லை.உச்ச நீதிமன்றம் விரும்பினால் அதனை செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் இருந்து நாங்கள்தான் அந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்போம். அதில் அப்போலோ தலையிடக் கூடாது. ஆணையத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய தயாராக இருக்கிறோம். ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால் அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம்.

ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை ஏற்க முடியாது. மனு மீது மனுவை தாக்கல் செய்து ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்கவே அப்பல்லோ முயற்சிக்கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அரசின் முடிவு. அதில் கூட ஆணையம் தலையிட முடியாது.  இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவிக்கையில், 'பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் எதுவுமே தெரியாமல் தான் இருந்துள்ளது. அதன் முடிவுகள் எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு கொடுக்கப்படவில்லை. பிறகு எதற்கு இத்தகைய ஆணையங்களை அமைக்கிறீர்கள்?,' எனக் கேள்வி எழுப்பியதுடன், ஆறுமுகசாமி ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளைக் கடைபிடிக்கிறது என்பது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை விசாரணை தொடர்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா