அதிக லாபம் தரும் முப்பரிமாண அச்சுத் தொழில்

அதிக லாபம் தரும் 3டி அச்சுத் தொழில்" என்ற மாபெரும் சவாலுக்கான பதிவுகள் ஆரம்பம்"அதிக லாபம் தரும் முப்பரிமாண அச்சுத் தொழில்" என்ற மாபெரும் சவாலுக்கான விண்ணப்பங்களை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் இன் அடிட்டிவ் மேனுஃபாக்சரிங் (சிஒஈஏஎம்) வரவேற்றுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்  2021 நவம்பர் 6 ஆகும்.


இந்தியாவில் பொம்மை உற்பத்தியானது, பல்வேறு தொழில்நுட்பங்களை சார்ந்துள்ளது. மேலும், இயந்திரங்களின் மூலதன செலவு, பொருள் செலவு, மனிதவள செலவு ஆகியவை இந்தியாவின் போட்டித்திறனை குறைக்கின்றன.

3டி பிரிண்டிங் எனப்படும் முப்பரிமாண அச்சுமுறை என்பது ஒரு அடுத்த தலைமுறை மாற்று தொழில்நுட்பமாகும், இதர தொழில்நுட்பங்களை விட இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே, பொருளாதார ரீதியாக பலனளிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த, 3டி பிரிண்டிங்கைப் பயன்படுத்தி டிஜிட்டல் பொம்மைகள் செய்யும் தொழிலில் அதிக லாபம் பெறுவதற்கான மிகப்பெரிய சவாலை சிஓஈஏஎம் அறிமுகப்படுத்துகிறது.

இந்த சவால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதல் பகுதியில் கொடுக்கப்பட்ட விவரக்குறிப்புகளுக்காக ஃப்யூஸ்டு டெபாசிஷன் மாடலிங் அல்லது டிஜிட்டல் லைட் ப்ராசசிங்கைப் பயன்படுத்தி 3டி அச்சிடப்பட்ட வேலை முன்மாதிரியின் உருவாக்கம் அடங்கும். இரண்டாவது பகுதியானது முன்மாதிரிக்கான வணிக விளக்கத்தை தயாரிப்பதை உள்ளடக்கியது ஆகும்.
https://www.meity.gov.in/grand-challenge-most-profitable-3d-printing-business எனும் இணைய முகவரியில் மேலதிக தகவல்களை காணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா