முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரயில்வே நாடாளுமன்றக் குழு உறுப்பினர் கூட்டம் மதுரையில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ கோரிக்கை

தென்னக இரயில்வே பொது மேலாளர் - இரயில்வே நாடாளுமன்றக் குழு உறுப்பினர் கூட்டம் மதுரையில் (18.11.2021) இன்று நடைபெற்றது.(நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ சார்பில் கோரிக்கை வைத்தார் அதில்   அருப்புக்கோட்டை தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பத்தூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உயர் மின்னழுத்த தொடர்வண்டி பாதை அமைந்துள்ளது. உப்பத்தூர் மற்றும் அதையொட்டி உள்ள முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தத் தொடர் வண்டி பாதையை கடந்து தான் தினமும் சென்று வருகிறார்கள்.


மேலும், மதுரை - திருநெல்வேலி, மதுரை - தூத்துக்குடி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய இணைப்புச் சாலையாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உப்பத்தூர் செல்லும் சாலையில், இந்த தொடர் வண்டி பாதைக்கு நடுவே சுரங்க நடைபாதை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.


சுரங்க நடைபாதை அமைத்தால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் உள்ளூர்வாசிகள், பொதுமக்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் இந்த சுரங்க நடைபாதையை கடந்து வெளியில் சென்றுவர முடியாத நிலை ஏற்படும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் தரைவழி போக்குவரத்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். ஆகவே, சுரங்க நடைபாதை அமைக்கும் முயற்சியை கைவிட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளதால்.

இது தொடர்பாக, மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்பி.,

தென்னக இரயில்வே பொதுமேலாளர் - இரயில்வே பாராளுமன்றக் குழு உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்தை எடுத்துரைத்தார்.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தொடர்வண்டி பாதைக்கு நடுவே சுரங்கப்பாதை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு இரயில்வே மேம்பாலம் அமைக்கவும், சுரங்கப்பாதை உள்ள இடங்களில் மழைக் காலங்களில் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை இரயில்வே நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்தென்னக இரயில்வே ஆலோசனைக்குழு கூட்டம் பல திட்டங்களுக்கு ஒப்புதல் 

கோட்ட துணைப் பொது மேலாளர் கோபிநாத் மாலய்யா கலந்து கொண்டார். புதிய இரயில்கள், ரயில் தட மேம்பாடு, ரயில் நிலையங்களின் மேம்பாடு, பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதித்த பின்னர் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டது


தேஜஸ் ரயில் சென்னை செல்லும் போதும்,  திரும்பும் போதும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தினர் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு  ஒப்புதலுக்காக இரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


 

மதுரை - திருவனந்தபுரம் ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் அமிர்தா விரைவு இரயிலை காய்கறி, பழ விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிய கோரிக்கை ஏற்கப்பட்டு பரிந்துரையைச் செய்துள்ளது தென்னக இரயில்வே. 


மதுரை- போடி- தேனி- வழியாக சென்னை செல்லும் வகையில் ரயில்வே தடம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அந்த கோரிக்கை ஏற்பு .  20601 / 20602 எண் கொண்ட வாரத்திற்கு மூன்றுமுறை இயங்கும் ரயிலுக்கான கோரிக்கை ஏற்கப்பட்டு ஒப்புதலுக்காக ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல். 


மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை ரயில் சந்திப்பிற்கும் பெரியார் பேருந்து நிலையத்திற்கும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரை ரயில் சந்திப்பின் முதலாவது நடைமேடையிலிருந்து கீழ்தளச் சுரங்கப்பாதை அமைக்க  சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதற்கான துவக்கநிலை முயற்சியாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்த கூட்டமும் நடைபெற்றுள்ளதாகவும்.

மதுரை இரயில் நிலையச் சந்திப்பில் மீன் சின்னத்தை நிறுவ வேண்டும் எனவும். வலியுறுத்தப்பட்டது இன்று அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான சீசன் வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. மீண்டும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மதுரை - மேலூர் - காரைக்குடி வழித்தடத்தில் புதிய இரயில் திட்டத்தினை அறிவிக்கக் கோரிக்கை வைத்தனர் அதற்கு பதில் அளித்த இரயில்வே அந்த திட்டத்திற்கான புதிய வழித்தடம் 85.7 கி.மீ என ஆய்வு செய்யப்பட்டு அதற்கான திட்டமதிப்பாக ரூ.649.5 கோடியாக கணக்கிட்டு 27/11/2014 அன்றே இரயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. ஆனால் அந்தத் திட்டம் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் ரயில்வே வாரியம் நிலுவையில் வைத்துள்ளது. 

அதே போல காரைக்குடி - திண்டுக்கல் - நத்தம் வழியிலான புதிய வழித்தடமும் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பாக ரூ1314.29 கோடி கணக்கிடப்பட்டு கடந்த 06/07/2015 அன்றே ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இவையெல்லாம் மதுரை மக்களுக்கு மிகவும் அவசியமான திட்டங்கள். 

இந்தத் திட்டங்களை துவங்கிட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினர் அதேபோல ரயில்வே குறித்து இன்னும் பல கோரிக்கைகளையும், மதுரையை மையமாக கொண்ட பல திட்டங்களையும் செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்திய வைகோ மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல் பாராட்டுக்குரியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...