பறிமுதல் செய்த நகைகளை கேட்ட அதிகாரி மனைவி மனு தள்ளுபடி

பறிமுதல் நகைகளை கேட்ட அதிகாரி மனைவி மனு தள்ளுபடி


சென்னை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்த, 1.58 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை தரக்கோரி, சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய, சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் மனைவி தாக்கல் செய்த மனுவை, ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன். தொழிற்சாலைகளுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க இலஞ்சம் வாங்குவதாக, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் செனறதையடுத்து, 2020 ஆம் ஆண்டு டிசம்பர்., மாதம் அவர் பணி செய்யும் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், 88 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமாக சிக்கியது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்த கணக்கில் வராத 1.37 கோடி ரூபாய் ரொக்கம், 1.58 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைர நகைகள் கைப்பற்றப்பட்டதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக, 7.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பாண்டியன், மற்றும் அவர் மனைவி லதா ஆகியோர் மீது, ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய நகைகள், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திரும்ப வழங்கும் படி பாண்டியனின் மனைவி லதா, சென்னையிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் இலஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்த தகவல்

"எங்களது குடும்பம் படித்த கௌரவமான குடும்பம். ?!

இலஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றிய நகை மற்றும் ஆபரணங்கள், என் பெற்றோர் சீதனமாகக் கொடுத்தவை. 

என் கணவரின் வருமானத்தில் இருந்தும் நகைகள் வாங்கப்பட்டன. 

 என் மகளின் பூப்புனித நீராட்டு விழா, மகன் திருமணம் ஆகியவற்றின் வாயிலாக, சில நகைகள் அன்பளிப்பாகக் கிடைத்தன. 

சட்டப்பூர்வ வழிகள் வாயிலாக மட்டுமே இந்த நகைகள் பெறப்பட்டன. என் மகளுக்கு, திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். 

இதற்கு நகைகள் தேவைப்படுகிறது. 

எனவே, ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய நகைகளை, திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்".எனக் கூறப்பட்டது.

இம் மனுவை விசாரணைக்கு வந்தது நீதிபதி ஓம்பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:

தங்களது வருமானத்தின் வாயிலாக மட்டுமே நகைகள் வாங்கப்பட்டதாக, மனுதாரர் கூறியுள்ளார். 

இருந்தாலும், அதற்கான ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை. 

வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக, மனுவை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா