ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேளாண் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்கிறது: மத்திய அமைச்சர் தகவல்

ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேளாண் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை திரு மோடி அரசு முதன்முறையாக ஊக்குவிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


இளைஞர்கள் என்றென்றும் அரசு வேலைகளையே நம்பியிருந்து அரசியல்வாதிகளை சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காக ஜம்மு & காஷ்மீரில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முந்தைய அரசுகள் வேண்டுமென்ற ஊக்கமளிக்கவில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

இதன் விளைவாக, தொழில்முனைவு மற்றும் சுய-வாழ்வாதாரத்திற்கான பிராந்தியத்தின் மகத்தான சாத்தியங்கள் எட்டப்படாமல் உள்ளன, என்று அவர் கூறினார்.


அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வேளாண் தொடக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மற்றும் விவசாயிகளின் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், கடந்த சில ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இப்பகுதியில் இளம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக விவசாயத் துறையை மேம்படுத்த ஒருங்கிணைந்த மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.

கடந்த காலங்களில், விவசாயிகள் பெரும்பாலும் தட்பவெப்ப நிலை மற்றும் இயற்கையின் மாறுபாடுகளை சார்ந்து விவசாயத்தை மேற்கொள்வார்கள் என்றும், கடந்த சில ஆண்டுகளில், லாவெண்டர் சாகுபடி போன்ற புதிய துறைகள் பெருமளவில் ஆராயப்பட்டன என்றும் அமைச்சர் கூறினார்.

உலகின் எந்த நாட்டிலும் உள்ள எந்த அரசாலும் அனைத்து இளைஞர்களுக்கும் அரசாங்க வேலைகளை உறுதி செய்ய முடியாது, ஆனால் ஒரு பொறுப்பான அரசாங்கம் எப்போதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடுகிறது, இதைத்தான் திரு மோடி அரசு முயல்கிறது என்று அமைச்சர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா