சிங்கப்பூர் வாலிபர் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

சிங்கப்பூர் வாலிபர் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


2009 ஆம் ஆண்டு 42.72 கிராம் 'Diamorphine' 'டயாமார்ஃபைன்' (இதிலிருந்து ஹெராயின் தயாரிக்கக் கூடிய) என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது  நாகேந்திரன் என்பவரைக் கைது செய்தனர். அப்போது அவரது வயது 21.'டயாமார்ஃபைன்' புற்றுநோயால் ஏற்படும் அதிதீவிர வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறதெனக் கூறப்பட்ட வேளையில் போதைக்காக இதை பயன்படுத்துவதற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடைப்பகுதியில் கயிறு மூலம் கட்டப்பட்டிருந்த உறையில் 'டயாமார் ஃபைன்' கடத்தி வந்த குற்றச்சாட்டுக்காக சிங்கப்பூர் காவல்துறையினர் நாகேந்திரனைக் கைது செய்தனர். அந்த உறையில் என்ன இருக்கிறது என்பது தமக்குத் தெரியாது என்றார் அவர். பின்னர் கைதான நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தல் வழக்கையும் எதிர்கொண்டார். பத்து ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் முடிவில், 2019 ஆம் ஆண்டில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு லேசான அறிவுசார் மாற்றுத்திறன் (Intellectual Disability) இருப்பதும், அவரது IQ அளவானது 69 புள்ளிகள் மட்டுமே உள்ளதும் தெரியவந்தது."நாகேந்திரனுக்கு உள்ள மனநல குறைபாடுகள் குறித்து நீதிமன்றத்துக்கும் தெரியும். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தாத  நிலையிலும் அவரைத் தூக்கிலிட முடியும் என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது. அவரிடம் உள்ள இந்த குறைபாடு மட்டுமே அவருக்கான தண்டனையைக் குறைக்க போதுமானதல்ல என்று சீங்கப்பூர் நீதிமன்றம் கருதிய நிலையில், இறுதி  முயற்சியாக நாகேந்திரன் தூக்கிலிடுவதை நிறுத்தக் கோரி மீண்டும் நீதிமன்றத்தில் மனு செய்த வழக்கறிஞர்கள். அதன் மீதான விசாரணை கடந்த திங்கள்கிழமை 8 ஆம் தேதி நடைபெறறது. நல்ல முடிவு வரும் எனக் காத்திருக்கிறோம்," என அவருக்கு ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் "நாகேந்திரன் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான் அவரது மனநிலை குறித்த கேள்வியும் எழுந்ததையடுத்து, அரசு தரப்பும் நாகேந்திரன் தரப்பும் இணைந்தே மனநலப் பரிசோதனை நடத்த முன்வந்த நிலையில் தான்  நாகேந்திரனின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படும் உத்தரவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்து.  சட்டங்கள் குற்றங்களைக் குறைக்க வேண்டும். மாறாக, உயிர்களைப் பறிக்கக் கூடாது என்பதே நாகேந்திரன் குடும்பத்தார் வாதம்."சிங்கப்பூர் அரசாங்கம் சட்டப்படி செயல்படும் என்பது உலகறிந்தது. தங்கள் நாட்டில் உள்ள மருத்துவர்களைக் கொண்டுதான் நாகேந்திரனைப் பரிசோதித்து அதன் முடிவுகளையும் வெளியிட்டது. அந்தநாட்டு அரசைக் குற்றம்சொல்ல ஒன்றுமில்லை. போதைப்பொருள் கடத்தலுக்கு அந்தநாட்டில் கடுமையான தண்டனை அளிக்கப்படுவது அவர்களின் சட்ட நீதி சார்ந்த உரிமை," என்றும்  கூறலாம் .சட்டங்கள் குற்றங்களைக் குறைக்க வேண்டும். மாறாக, உயிர்களைப் பறிக்கக் கூடாது என்பதே நாகேந்திரன் குடும்பத்தாரின் வாதம். இந்த நிலையில்தான் கடைசி நேரத்தில் நாகேந்திரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் உத்தரவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா