சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்து

சேலம் மாநகராட்சி கருங்கல்பட்டி பாண்டுரங்க நாதர் தெருவில் வசிக்கும் கணேசன் வீட்டில்  காலை  6.30 மணி அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர்


பயங்கர சப்தமாக வெடித்துச் சிதறிய விபத்தில் கணேசன், கோபி, தீயணைப்பு அலுவலர் பத்மநாபன், வெங்கட்ராஜன் ஆகியோரது வீடுகள் இடிந்து தரைமட்டமானது. வீடுகள் இடிந்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படும் நிலையில்,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி செய்தனர்.

அதில், தீயணைப்புப் பணி அலுவலர் பத்மநாபன்  அவர் மனைவி தேவி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர், விபத்தில் ராஜலட்சுமி(வயது 70) மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.


இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் மக்களிடம் சோகம் காணப்படும் நிலையில் காவல்துறை தீயணைப்பு துறையினருடன் பொதுமக்கள் அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. அருள் உள்ளிட்டவர்கள் நேரில் பார்வையிட்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா