பழங்குடியினர் முக்கியக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வாழ்ந்திருக்கிறார்கள்.: ஜெய்பீம் விமர்சனம்

பழங்குடியினர் முக்கியக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வாழ்ந்திருக்கிறார்கள்.


முன்னால் நீதிபதி சந்துரு கம்யூனிஸ சித்தாந்தம் உள்ள பணியில் அதிகமாக தீர்ப்பை வழங்கி ஓய்வுபெற்ற பின்னர் இரயிலில் பயணம் செய்து சொகுசு காரை மறுத்தவர்.அவரது ரோல் மாடல் நடிகர் சூர்யா பாத்திரம் பாதி காதை மீதி கதை  நடித்த செங்கேனிக்கு விருதே கொடுக்கலாம்.

தமிழகத்தில் நடந்து  மக்கள் மறந்து போன கொடூரமான உண்மைச் சம்பவத்தினை பிரதிபலிக்கும் மனதில் மீண்டும் மிக அழுத்தமாகப் பதிவு செய்யும் விதத்தில் சொல்லியிருக்கும் திரைப்படம். வக்கீல்களிலும், காவல் துறையிலும் நேர்மையான  நல்லவர்கள், மோசமான கெட்டவர்கள் உண்டு என்று  சமப்படுத்த  முயற்சித்திருந்தாலும்  அது எடுபடவில்லை.

நடிகர் பிரகாஷ்ராஜுக்குப் பதிலாக வேறு யாரையேனும் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்.கேட்பாரற்ற , வாக்கு அடையாளம் கூட இல்லாத ஏழை இருளர் பழங்குடியினர்  என்பதால் விசாரணை, வழக்குப் பதிவு, உடலை அப்புறப்படுத்துதல் முதல் நீதிமன்ற வாதங்கள் வரை சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அலட்சியமாக ஈடுபடுகிறார்கள். என கதைக்களத்தில் நிரூபிக்க முடிகிறது. இதுவே அதனால் ஒரே ஒரு வக்கீல் உண்மையாக மெனக்கடும் போது உண்மைகளை ஆதாரத்துடன் நிரூபிக்க முடிகிறது.இதுவே வலிமை வாய்ந்தவர்கள் எனும் போது உண்மைகள் ஆதாரமில்லை என்று வாயடைத்துப் போகின்றன  முழு முயற்சி செய்யும் வக்கீல்களையும் தற்போது காண முடிவதில்லை. 

சட்ட நுணுக்கங்களோ சாமானியர்களுக்கு எட்டாத உயரத்தில் கோடிகளில் சம்பளம் பெறும் வக்கீல்களிடம் வசப்பட்டு நிற்கிறது. என ஜெய்பீம்  பெயர் தான் படத்தின் கதையில் பொருந்தும் நிலையில் இல்லை.  நாம்  ஜெய் பீம் படத்தின் கதையின் மையக் கரு எது என்பதைக் கண்டறிய வேண்டியது முக்கியமானது .


அதில் இருந்து துவங்குவோம் "அக்கா கூட நம்ம ஊரு தான்னா. பாம்பு பிடிச்சதுக்கு காசு என்னாத்துக்கு?".....

"என்னாது நம்ம ஊரா? கொளத்து மேட்டை எல்லாம் ஊராக்கிட்டாங்களா?"

"என்னாண்ணா காரு ஊரு போயி சேருமா?"

இந்த உரையாடலில் உள்ள ஜாதியப் பார்வையும்,


நகை காணாமல் போன போது அந்தப் பெண்ணிற்கு ராசாகண்ணு செய்த பரிகாசத்தின் மீதான அவமானம் மட்டுமே நகையை ராசாகண்ணு தான் திருடி இருப்பார் என்று சொல்லும் இடம். இது தான் ஒட்டுமொத்த கதையின் உற்பத்தியை உண்டாக்கிய கரு. கதைக்களம்


அப்படியே இராமாயணத்திற்குச் செல்லுங்கள். கூனி பாத்திரம் மீது அம்பும் பந்தும் இட்டு விளையாடிய போது கூனிக்கு ஏற்பட்ட இராமனின் மீதான வன்மம் இராமனைத் தண்டிக்க சந்தர்ப்பம் ஏற்பட்ட இடம் கைகேயியின் வரங்களை நினைவுபடுத்தி வனவாசம் போக வைப்பது. 


முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அப்போது எட்டி உதைக்கப்பட்டதாக பேசப்படவில்லையென்றால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தன் வாழ்க்கையை இழக்க நேரிடும் அளவிற்கு சொத்தும் அகில் ஊழலும் பின்னர் தண்டனையும் நடந்திருக்காது.


அந்த மன்றத்தில் அடிதடி ஆனதாக கூறவில்லை என்றால் 1991 ல் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற வெறி அவருக்கு வந்திருக்காது. 1996 டிசம்பரில் கைது செய்யப்படவில்லை என்றால் 2001 ஆம் ஆண்டில் முதலமைச்சராக முயற்சி செய்திருக்க மாட்டார். அப்போது டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் கைதும் நடந்திருக்காது.


கிண்டல் கேலிகளை ஏற்படுத்தும் போது யாருக்கும் தெரியாது. அவமானப்பட்டவர்கள் எப்படி ...என்ன.. திரும்பத் தருவார்கள் என்று.


பாம்புகள் பிடித்த இருளர்கள் போலான நரிகுறவர்கள்  வாழ்வியல் நாடோடிகள் மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூர் நோக்கி  படைநடத்தி வந்த  போது மராட்டிய பகுதியில் இருந்து வந்த படைகள் நாடோடி கூட தமிழகத்தில் தங்கிப்போனவர்கள் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பட்டா  எப்படி வழங்கலாம் ? 


இப்படி தான் தமிழரல்லாதவர்கள் தமிழ் நாட்டை சுரண்ட வழி வகுப்பது, வரலாற்றை திரிப்பது  தான் அரசியல் கூட்டதின் சதியே என .பல சிறு அரசியல் கட்சிகள் இப்போது குதிக்கக் காரணம் என்ன ஜாதி வாரி, வகுப்பு வாரி அரசியல் தான்


இப்போது சமீபத்திய காலநிலை சினிமாக்காரர்கள் தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற தமிழ் குடிகளை ஆதிக்கச் சாதியினராகவே காட்ட வேண்டிய அவசியத் தேவை, தன் மகன் நடிகன் இரண்டாம் மகன் ஜாதியில் பெண் எடுத்த தீவிர ஓவியர் நடிகர் தமிழ்நாட்டில் வாழும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு உள்ளது என்பதே உண்மை. அப்போது  நடந்த சம்பவம் ராசகண்ணுவை அடித்துக் கொன்ற துணைக் காவல் ஆய்வாளர் அட்டவணைப் பிரிவு  கிருஸ்தவரான அந்தோனிச்சாமி என்ற தகவல்களை மறைத்து அவருக்கு எதிராக போராடிய தோழர் கோவிந்தன்


வன்னியர் என்பதை மறைத்து உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் தீச்சட்டி படம் வைத்த காரணம் என்ன இயக்குனர் ஞானவேல்? உண்மை சம்பவம் என கூறிவிட்டு பலியும் போடும் நிலையில் அட்டவணைப் பிரிவு காவலர் செய்த கொலையால் விளைந்த கதைக்கு பெயர் ஜெய் பீம்.

இது வடமொழி கலந்த பெயர். நல்லாருக்கு இயக்குனர் செய்த ஜாதியச் சந்தை.


நிஜத்தில், பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு எதிரான காவல்துறை ஆதிதிராவிட கிருத்தவர். உதவியவர் வன்னியர், வழக்காடியவரும் வன்னியர்.  


ஆனால் சினிமா காவலராக வன்னியர் எனக் காட்டிவிட்டு, உதவியவன் ஜெய் பீம் என்று விட்டார்கள். பாருங்கள் சினிமாவிற்காக ஒரு புதிய ரீல் அதில் தான் இவர்கள் தரமான தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் இல்லை போலிருக்கிறது எனத் தோன்றுகிறது


தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களின் செயல்பாட்டில் உள்ளவர்களைப் பார்த்தால்  வன்னியர்களாக இருப்பார்கள்.என்ற தவறான எண்ணம் விதைக்கப்பட்ட நிகழ்வு தான் ஜெய் பீம் ..கலா ரசனை + அரசியல்.+ ஜாதிய வாதம் ....கலவை தான் கதை முழுவதும் உண்மை பேசும் கதை அல்ல 75 சதவீதம் உண்மை பேசும்  இரசனையான படம் டூயட் சன்டைக்காட்சிகள் இல்லாத எதார்த்தம் நிச்சயம் விருது பெரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா