நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.


பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழப்பு.


அடையாளம் காணமுடியாதபடி உடல் கருகி இருப்பதால் டிஎன்ஏ பரிசோதனை.

மனைவியுடன் பயணித்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் நிலைமை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழகவரலாற்றில் மிகபெரிய சோக சம்பவம் ஒன்று அடுத்து பதிவாகியுள்ளது, இது அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்படுத்தும் விஷயம், மிக பெரிய எச்சரிக்கையினையும் மாபெரும் சந்தேகங்களையும் தொடங்கி வைத்திருக்கும் விஷயம்


தமிழகம் குன்னூர் பகுதிக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த முப்படைகளின் கூட்டு தளபதி ஜெனரல் பிபின் ராவத் குடும்பத்தோடு உயிரிழந்திருப்பது ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஈட்டி பாய்ந்த தருணம்அவர் இந்திய படைகளின் தலைமைத் தளபதி, சீனாவுடனான இந்நேர முறுகலில் அவரின் ஒவ்வொரு அசைவும் தேசத்தின் பாதுகாப்பை நிர்மானித்தது


இந்திய ராணுவத்துக்கு இவருக்கு முன் கூட்டுதளபதி என பதவியில் யாருமில்லை, இப்பதவி தற்போதய ஆட்சியில் தான் உருவாக்கபட்டு அனுபவம் வாய்ந்த பிபின் ராவாத் முதல் தளபதியாக நியமிக்கபட்டார்1978 ஆம் ஆண்டு முதல் பணியிலிருக்கும் அவரின் பிரதான சாதனை 1987 ஆம் ஆண்டில் சீன ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்தது, மலைபகுதி யுத்ததில் நிபுணத்துவம் பெற்றவர். அப்போதய பீஹார் தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தவர் தனது திறமையால் இப்போது பெரும் தலைமை பொறுப்பை  அடைந்தவர்

கார்கில் போரின் பங்களிப்பும் 2015 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு பால்கோட் தாக்குதலில் இவரது பங்களிப்பு மிகுதியாகும்


இப்பொது  முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைமைத் தளபதியாக

ராணுவத்தின் உச்ச நிலையில் உள்ள ஒருவரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக வாய்ப்பில்லை தான். இருந்தும் இந்த நிலையில்

ஆயிரம் அதிர்ச்சிகள் சூழ்ந்த இது அசாதாரண சூழல் 

இதனால் உரிய விசாரணை முடியும் வரை நாட்டு மக்கள் காத்திருக்க வேண்டும் விபரம் அறிய.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்