முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்


கங்கா விரைவுச்சாலை மீரட், ஹபூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், புடுவான், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் வழியாக செல்லும்

பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு நாளை நினைவுதினத்தையொட்டி மரியாதை

‘’ கங்கா விரைவுச்சாலை உ.பி.யின் முன்னேற்றத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடும்’’


‘’ உ.பி முழுவதும் வளரும் போது, நாடும் வளருகிறது. ஆகையால், இரட்டை எஞ்சின் அரசின் கவனம் உ.பி.வளர்ச்சியில் உள்ளது’’

‘’சமுதாயத்தில் விடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு வளர்ச்சியின் பயன்களை கொண்டு சேர்க்க அரசு முன்னுரிமை. அதே உணர்வு வேளாண் கொள்கை மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கையில் பிரதிபலிக்கிறது’’

‘’ உ.பி. பிளஸ் யோகி, சிறந்த உபயோகமாக உள்ளது என உ.பி மக்கள் கூறுகின்றனர்- யுபிஒய்ஓஜிஐ’

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உ.பி. முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு பி எல் வர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு திரண்டிருந்தவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், ககோரி சம்பவத்தில் உயிர்த்தியாகம் புரிந்த பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். உள்ளூர் மொழியில் பேசிய பிரதமர், விடுதலைப் போராட்ட கவிஞர்கள் தாமோதர் ஸ்வரூப் வித்ரோகி, ராஜ்பகதூர் விகால், அக்னிவேஷ் சுக்லா ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.’’ பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு நாளை நினைவுதினம். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்த மூன்று ஷாஜஹான்பூர் புதல்வர்கள் டிசம்பர் 19-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவின் விடுதலைக்காக உயிர் நீத்த இத்தகைய தலைவர்களுக்கு நாம் பெரும் கடன் பட்டுள்ளோம்’’ என்று பிரதமர் தெரிவித்தார்.


கங்கா மாதா அனைத்து புனிதத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஆதாரமாக திகழ்வதாக பிரதமர் தெரிவித்தார். நமது வலிகளை எடுத்துக்கொண்டு, மகிழச்சியை நமக்கு அவர் தருகிறார்.இதேபோல, கங்கா விரைவுச்சாலை உ.பியின் முன்னேற்றத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடும். இது மாநிலத்தின் ஐந்து வரங்களுக்கு ஆதாரமாக இருக்கும். விரைவுச்சாலைகள், புதிய விமான நிலையங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றின் மூலம், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது ஒரு வரம். இரண்டாவது வரம் வசதிகளை அதிகரித்து, மக்களுக்கு சுலபமான வழிகாட்டுதல். மூன்றாவது வரம் உ.பி.யின் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவது.நான்காவது வரம் உ.பியின் திறன்களை அதிகரிப்பது. ஐந்தாவது வரம் உ.பி.க்கு  அனைத்து விதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்துதல்.

உ.பி.யில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உள்கட்டமைப்பு, ஆதாரங்கள் எவ்வாறு முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு உதாரணமாகும். அரசுப்  பணம் எவ்வாறு பயன்பட்டது என்பதைக்  கண்டீர்கள். ஆனால், இன்று உ.பி.யின் பணம் வளர்ச்சியல் முதலீடு செய்யப்படுகிறது’’ என்று பிரதமர் கூறினார். உ.பி முழுமையாக  வளரும் போது, நாடும் வளருகிறது. ஆகையால், இரட்டை எஞ்சின் அரசின் கவனம் உ.பி.வளர்ச்சியில் உள்ளது. ‘’ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’’ என்ற மந்திரத்தின்படி, உ.பி.யின் வளர்ச்சிக்கு நாங்கள் உண்மையான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார். பிரதமர் இந்தக் கவனத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தார்.மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர, மற்ற நகரங்கள்,கிராமங்களில் மின்சாரம் இருக்கவில்லை. இரட்டை எஞ்சின் அரசு, உ.பி.யில் 80 லட்சம் இலவச மின்சார இணைப்புகளை அளித்துள்ளதுடன், ஒவ்வொரு மாவட்டமும் முன்பை விட பல மடங்கு அதிகமாக மின்சாரத்தை பெற்று வருகிறது’’ என்று அவர் கூறினார். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் உறுதியான வீடுகளைப் பெற்றுள்ளனர். மற்ற பயனாளிகளுக்கும் இது கிடைக்கும் வரை திட்டம் தொடரும். ஷாஜஹான்பூரில் கூட 50 ஆயிரம் பக்கா வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முதல்முறையாக, தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். ‘’ ’சமுதாயத்தில் விடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு வளர்ச்சியின் பயன்களை கொண்டு சேர்க்க அரசு முன்னுரிமை. அதே உணர்வு வேளாண் கொள்கை மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கையில் பிரதிபலிக்கிறது’’ என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்துக்கான பணிகளுக்கு கெஞ்சும் மனநிலையை விமர்சித்த பிரதமர், அத்தகைய சக்திகள், ஏழைகள் மற்றும் சாதாரண மக்கள் அவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்தார். ‘’ இவர்களுக்கு பாபா விஸ்வநாதர் ஆலய வளாகம் கட்டப்படுவதில் பிரச்சினை. அயோத்தியில் ராமபகவானுக்கு பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்படுவது பிரச்சினை. கங்கையைத் தூய்மைப்படுத்துவதில் இவர்களுக்கு பிரச்சினை உள்ளது. இவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர். இந்திய விஞ்ஞானிகள் இந்தியாவிலேயே தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை இவர்கள் விமர்சிப்பார்கள்’’ என்று பிரதமர் கூறினார். மோசமான சட்டம் ஒழுங்கு நிலை அண்மைக்காலத்தில் மாறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ‘’ உ.பி. பிளஸ் யோகி, மிகவும் உபயோகமாக உள்ளது என உ.பி மக்கள் கூறுவதை பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த விரைவுச்சாலையின் பின்னணியில்  நாடு முழுவதும் அதிவிரைவாக இணைக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கின் உந்துதல் உள்ளது. ரூ.36,200 கோடி மதிப்பீட்டில் 594 கி.மீ தூர விரைவுச்சாலை மீரட்டின் பிஜாவுலி கிராமத்தில் துவங்கி, பிரயாக்ராஜின் ஜூதாப்பூர் தந்து கிராமத்திற்கு அருகே வரை நீளும்.  கங்கா விரைவுச்சாலை மீரட், ஹபூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், புடுவான், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் வழியாக செல்லும். ஷாஜஹான்பூரில் 3.5 கி.மீ தூரத்திற்கு இந்திய விமானப்படை விமா னங்கள் னங்கள் தரையிறங்கும் வகையிலும், புறப்படும் வகையிலும் விமான தளம் அமைக்கப்படும். இந்த விச்சாலை வழியே தொழில் வழித்தடச்சாலையும் அமைக்கப்படவுள்ளது.

இந்த விரைவுச்சாலை, தொல் வளர்ச்சி, வர்த்தகம்,வேளாண்மை, சுற்றுலா போன்ற பல்துறை மேம்பாட்டுக்கு வழிகோலும். இந்தப் பிராந்தியத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிய உந்துசக்தியாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...