சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் மரங்கள் மீது ஆணி அடிக்க தடைசெய்து அரசாணை வெளியிட வலியுறுத்திய சூழலியல் குழுவினர்

தமிழகத்தின் சூழலியல் செயல்பாட்டாளர்களின்  தேனி மாவட்ட மாநாடு நடைபெற்றது 


பசுமை செந்தில் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்.உள்ளாட்சிப்  பிரதிநிதிகள்.தன்னார்வலர்கள்.

புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் எஸ்.ராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி நடத்திய நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமுள்ள சூழலியல் செயல்பாட்டாளர்களின் சார்பாக தேனி மாவட்டத் தன்னார்வலர்கள் குழுவினர் கடந்த மூன்றாண்டுகளாக தேனி மாவட்டத்தின் பனை விதைகள் நடவு செய்யும் பணியையும், ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள், விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் இந்தகீ களப்பணியில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த , தன்னார்வலர்களுக்கு பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் விழா தேனியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தி.மு.க.வின் தேனி வடக்கு மாவட்டப் பொறுப் பாளரான தங்கதமிழ்செல்வன் தலைமையில். சென்னை யுனிவர்சல் சின்டிகேட் அமைப்பின் தலைவரான நைனார் முகமது முன்னிலை வகித்தார். விழாவில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு தன் னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், மற்றும் கேடயங்களை வழங்கிப் பேசினார். விழாவில், நம்மாழ்வார், பென்னிகுவிக் பெயர் களில் 9 பேருக்கு விருதுகளும், 30 அமைப்புகள், 180 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களும், கேடயங்களையும் வழங்கிப் பேசினார். விழாவில் அவர் பேசும்போது, தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பசுமைச் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.


பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலும் ஒழிக்க மீண்டும் மஞ்சள் பை இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கு சென்றாலும் மஞ்சள் பை தான் எடுத்துச் செல்வார்கள். பின்னர் அது நாகரிகமில்லை எனக் கருதி விட்டார்கள். உலகிற்கே நாகரிகம் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான். எனவே, வெளியிடங்களுக்கு செல்லும் போது மஞ்சள் நிலை பை தூக்கிச் செல்வது அவமானமில்லை. அது நமது அடையாளம். யாரெல்லாம்  மஞ்சள்பை பயன்படுத்துகிறார்ளோ அவர்களெல்லோருமே சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் தானென்றார். பின்னர் தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்களின் சார்பில்  மஞ்சள்பை விழிப்புணர்வு இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்து மஞ்சள்பைகளை வழங்கினார். விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். சரவணக்குமார், தேனி மேலப்பேட்டை  இந்து நாடார்கள் உறவின்முறை யின் பொதுச்செயலாளர் ராஜமோகன், தேனி கௌமாரியம்மன் உணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதாகர், தேனி பாலசங்கா நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில்நாதன் ஹோட்டல் தேனி இண்டர்நேஷனல் உரிமையாளர் நாராயணன், அய்யப்பன், தேனிமாவட்டத் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப் பாளர் பசுமை செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்ட நிகழ்வில் மரத்தில் ஆணிஅடிப்பதற்குத் தடைவிதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மூலமாக தமிழக முதல்வருக்கு முன் வைத்தனர்.

தமிழகத்தை பசுமை சூழ்ந்த மாநிலமாக மாற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத அக்கரையுடன்.கூடுதலான கவனம் செலுத்தி அதற்கென ஓர் தனித்துறையை அமைத்து அதற்கு ஏற்றவாறு தமது எண்ணங்களை செயலாக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர் யார்..? என்று தேர்வுசெய்து. புதுக்கோட்டை மன்னின் மைந்தரை அமைச்சராக்கி.சிறப்புறச் செயலாற்றிவரும் தமிழகத்தின் முதல்வர் செயல்படுத்த வைத்த   கோரிக்கையைக் கருணை உள்ளத்தோடு பரிசீலித்து விரைவில்  நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு அந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காத்திருக்கும் நிலையில் நெகிழிகள் தடுப்பு போல மரங்கள் மீது இழைக்கப்பட்ட தீங்குகள் தடுக்க ஆணி அடித்தால் தண்டனை என்றால் தான் மக்கள் பயந்து தயங்கி அந்த நிலை மாறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்