முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில எய்ம்ஸ், உரத்தொழிற்சாலை மற்றும் ஐசிஎம்ஆர் மையத்தைத் தொடங்கி வைத்தார்


உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்




எய்ம்ஸ், உரத்தொழிற்சாலை மற்றும் ஐசிஎம்ஆர் மையத்தைத் தொடங்கி வைத்தார்

இரட்டை இயந்திர அரசு வளர்ச்சிப் பணிகளை இரட்டிப்பு வேகத்தில் செயல்படுத்தும் : பிரதமர்

“உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள் மற்றும் சுரண்டப்பட்டவர்களைப் பற்றி சிந்திக்கும் அரசு, கடுமையாக உழைத்து அதற்கான பலனையும் பெறுகிறது”

“எதுவும் முடியாது என்று கூறியவர்களுக்கு, புதிய இந்தியாவை படைப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு ஆதாரமே இன்றைய நிகழ்ச்சி”

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டு வரும் உத்தரப்பிரதேச அரசுக்கு பாராட்டு




உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்  திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். 

கோரக்பூரில் எய்ம்ஸ், உரத்தொழிற்சாலை மற்றும் ஐசிஎம்ஆர் மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பதிய கட்டடங்கள் திறக்கப்பட்டதை முன்னிட்டு  உத்தரப்பிரதேச மக்களுக்கு பிரதமர்  பாராட்டுத் தெரிவித்தார். எய்ம்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலைக்கு  5 ஆண்டுகளுக்கு முன்பு தாமே அடிக்கல் நாட்டியதுடன் இன்று அவற்றை தொடங்கி வைப்பதை நினைவுகூர்ந்த அவர், ஒரு திட்டத்தைத் தொடங்கினால் அதை முடிக்க அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இரட்டை இயந்திர அரசு இருந்தால் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் வேகமும் இரட்டிப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அரசு நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால், பேரிடர்கள் கூட அதற்கு தடையாக இருக்காது என்றும் அவர் கூறினார்.  ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் நலனில் அரசு கவனம் செலுத்தி, பாடுபட்டால் நல்ல விளைவுகளைப் பெற முடியும். புதிய இந்தியா தீர்மானித்துவிட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி ஆதாரம் என்றும் அவர் தெரிவித்தார்.  

மும்முனை அணுகுமுறையில், 100 சதவீதம் வேம்பு பூசிய யூரியாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், யூரியாவை தவறாகப் பயன்படுத்துவதை அரசு தடுத்துள்ளதாக  பிரதமர் தெரிவித்தார்.  தங்களது நிலத்திற்கு எந்த வகையான உரம் தேவை என்பதை  முடிவு செய்ய ஏதுவாக விவசாயிகளுக்கு மண்வள ஆரோக்கிய அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். யூரியா உற்பத்தியை அதிகரிக்க அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மூடப்பட்ட உரத்தொழிற்சாலைகள், மீண்டும் திறக்கப்பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்து உரத்தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், நாட்டில் 60 லட்சம் டன் யூரியா கிடைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கரும்பு விவசாயிகளுக்காக சமீபத்திய ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு பணியாற்றியதற்காக உத்தரப்பிரதேச அரசை பிரதமர் பாராட்டினார். கரும்பு விவசாயிகளுக்கான கட்டுப்படியாகக்கூடிய விலையை அண்மையில் ரூ.300 வரை உயர்த்தியதற்காகவும், முந்தைய அரசுகள் கடந்த பத்தாண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கியதைவிட அதிகத் தொகை வழங்கியதற்காகவும் மாநில அரசுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

விடுதலைக்குப் பிறகு இந்த நூற்றாண்டு தொடங்கும் வரை, நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்ததாக பிரதமர் தெரிவித்தார்.  மேலும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பேயி அனுமதி அளித்தார்.  கடந்த 7 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதே  தமது அரசின் குறிக்கோள் என்றும் அவர் அறிவித்தார்.கோரக்பூர் உரத்தொழிற்சாலை இந்தப் பகுதி விவசாயிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், வேலைவாய்ப்பு வழங்குகிறது என்பதையும் அனைவரும் அறிவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆலை முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், அதனை மீண்டும் திறக்க முந்தைய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் கூறினார். கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்ததையும் அனைவரும் அறிவார்கள். 2017-க்கு முன்பு அரசை இயக்கியவர்கள், கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுவதற்கான இடம் வழங்க அனைத்து விதமான சாக்குப்போக்குகளையும் கூறி வந்தனர். இப்பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பெருமளவுக்கு குறைந்திருப்பதையும், மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் மையம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகள்,  புதிய வலிமை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகந்தை மிகுந்த அரசியல், அதிகார அரசியல், ஊழல்கள், மற்றும் மாஃபியாக்களின் ராஜ்ஜியத்தை விமர்சித்த பிரதமர், இவை அனைத்தும் கடந்த காலத்தில் மக்களுக்கு துயரத்தைத்தான் ஏற்படுத்தியது என்றார். இது போன்ற சக்திகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசு  ஏழைகளுக்காக அரசு கிடங்குகளை திறந்து விட்டிருப்பதாகக்  குறிப்பிட்ட பிரதமர்,  அதில் உள்ள உணவுப் பொருட்களை அனைத்து குடும்பங்களுக்கும் விநியோகிப்பதில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் மும்முரமாக இருப்பதாகவும்  தெரிவித்தார். இதன் பலனை உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுமார் 15 கோடி மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஹோலிப் பண்டிகைக்குப் பிறகும் பிரதமரின் கரீஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அண்மையில் நீட்டிக்கப்பட்டது. முந்தைய அரசுகள் கிரிமினல் குற்றவாளிகளுக்கு பாதகாப்பு அளித்ததன் மூலம் உத்தரப்பிரதேசத்திற்கு அவப்பெயரை தேடித் தந்தன. தற்போது மாஃபியாக்கள் சிறையில் உள்ளனர், முதலீட்டாளர்கள் உத்தரப்பிரதேசத்தில் சுதந்திரமாக முதலீடு செய்கின்றனர். இதுதான் இரட்டை இயந்திரத்தின் இரட்டை வளர்ச்சி. எனவே  உத்தரப்பிரதேசம் இரட்டை இயந்திர அரசின்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...