பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்து இந்தியாவில் குற்றச்செயல்கள் அறிக்கை விபரம்

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை


தேசிய குற்ற ஆவணக் காப்பகம், குற்றச்செயல்கள் குறித்த தகவலைத் தொகுத்து “இந்தியாவில் குற்றச்செயல்கள்” என்ற வெளியீட்டில்  வெளியிடுகிறது.  குடும்ப வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களின் புள்ளி விவரங்கள் மாநிலம் வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் இந்த அறிக்கையில் இடம் பெறுகின்றன.


குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005ன்படி 2016 முதல் 2020 வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விவரங்கள் வருமாறு. 2016-ல் 437, 2017-ல் 616, 2018-ல் 579, 2019-ல் 553, 2020-ல் 446 என வழக்குகளின் எண்ணிக்கை உள்ளது. 2017 முதல் 2020 வரை குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 


காவல் துறை, பொது ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை உறுதி செய்ய மத்தி்ய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. இதன் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961 உட்பட பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  உள்கட்டமைப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு, விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சமூகத்தில் திறன் கட்டமைப்பு, புலனாய்வு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோருக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட  8 நகரங்களில் (சென்னை, பெங்களூரு, தில்லி. அமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை) பாதுகாப்பான  நகரத்திட்டங்கள்,  செயல்படுத்தப்படுகின்றன..

மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸூபின் இரானி  எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்