மது போதை தகராறு காரணமாக கணவர் கொலை மனைவி கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காந்திநகர் பிள்ளையார்கோயில் தெரு


ராஜாராம். வயது 45 , ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ரேவதி(வயது36), ம் 9 வயதிலும் 8 வயதிலும் இரு மகன்கள் உள்ளனர். ராஜாராம் மது அடிமையானவர் எனத் தெரிகிறது. தினமும் மது போதையில் வந்து வீட்டில் தகராறு செய்து, மனைவியை அடித்து உதைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், பின் சமரசம் ஏற்படுவதுமாய் நாட்கள் நகர்ந்த.நிலையில் சம்பவம் நிகழ்ந்த அன்று மது போதையில் வந்த ராஜாராம், வழக்கம் போலவே மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ரேவதி, ராஜாராமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் நீண்ட நேரம்  சண்டை நீடித்ததில் ரேவதியை ராஜாராம் கடுமையாக தாக்கியதாகவும்

 ஆத்திரமடைந்த ரேவதி, தனது மகன் பயன்படுத்தும் கிரிக்கெட் மட்டையை எடுத்து ராஜாராம் தலைமையில் சரமாறியாக தாக்கியதில் படுகாயமடைந்த ராஜாராம், சம்பவ இடத்திலேயே  பலியானார் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்து வீட்டினர், காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.  அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைபற்றி ரேவதியைக் கைது செய்தனர். மதுவால் துவங்கிய பிரச்சினை காரணமாக  தந்தை இறந்த நிலையில், தாய் கைதாகி சிறை செல்லும் சூழலில் அவர்களின் இரு மகன்களின் நிலை கேள்விக்குறியானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்