முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூர்த்தியாகாத மதுரை மீனாட்சியம்மன் ஆலய இராஜகோபுரம்

பூர்த்தியாகாத மதுரை மீனாட்சியம்மன் ஆலய இராஜகோபுரம்


தமிழகத்திலேயே மிகப்பெரிய உயரமாக அமைந்திருக்க வேண்டிய கோபுரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம். ஆனால், இந்தப் புரிதல் மதுரை மக்களுக்கே இல்லை என்பதுதான் எதார்த்தம்.

விஜயநகரப் பேரரசின் தென்னக விரிவாக்கம் செய்த மன்னர்களில் 


திருமலை நாயக்கர் மன்னர் தனது தலைநகரை திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு மாற்றி ஆட்சி செய்த காலத்தில் வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் அமைத்த மஹால் (முன்னால் பாண்டிய நாட்டில் அரண்மனை) அதை மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட வரலாற்று அடையாளங்களையும்  


சிந்தித்தவர், எதிர்காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலின் மற்ற கோபுரங்கள் எல்லாம் கட்டிடங்களால் மறைக்கப்பட வாய்ப்பு ள்ளதையும் அப்போது கணித்து. அதனால் மிகவும் பிரம்மாண்டமாக ராஜகோபுரத்தைக் கட்டத் தொடங்கினார். பெரும்பாலும் நாயக்கர்கள் அதன் மன்னர்கள் வைணவ நெறியைப் பின்பற்றி வரும் நிலையில் சைவ நெறி சார்ந்த மீனாட்சி அம்மன் ஆலயக் கோபுரம் அவராலும், அவருக்குப் பின் அந்த வம்சத்தின் கடைசி அரசி மீனாட்சி (தற்கொலை செய்த அரசி) யாலும் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட முடியாமலேயே நின்று போனது. 

மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்களுக்கெல்லாம் மகுடமாக அமையும் விதத்தில் 16 ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்ட அடித்தளமிடப்பட்டது தான் ராஜகோபுர திருப்பணி. அதற்காக, புதுமண்டபம் எதிரே நந்தி சிலைக்கருகில் அஸ்திவார அடித்தளமும்  அமைக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போதுள்ள உள்ள 14 கோபுரங்களில் மிகவும் உயரமானது தெற்குக் கோபுரம் அதன் உயரம் 170 அடி. அதற்காக அமைக்கப்பட்ட அஸ்திவார அடித்தளத்துடன் ராஜகோபுரத்தின் கல்ஹாரம் எனப்படும் அடித்தளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதைவிட சுமார் மும்மடங்கு பெரியது. அந்த ராஜகோபுரம் முழுமையாகியிருந்தால் அது தமிழகத்திலேயே மிக உயரமான கோவில் கோபுரமாக அமைந்திருக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“மீனாட்சியம்மன் கோவில் ராஜகோபுரமானது அதன் பிரம்மாண்டத்தில் மட்டுமல்ல, மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்காகவும் பெரும் வியப்பைத் தருகிறது. இதன் அடித்தளமான கல்ஹாரத்தின் உயரம் 50 அடியும். 170 அடி நீளமும், 110 அடி அகலமுமாகவுள்ளது. கோபுரம் முழுமையாகக் கட்டிமுடிக்கப் பட்டிருந்தால், அதன் உயரம் 300 அடிகளாக இருந்திருக்கலாமெனவும் கணிக்க முடிகிறது. கடைகளும் அதன் தெருவில் ஆக்கிரமிப்பு சூழ்ந்துள்ளதால், இக் கோபுரத்தின் பிரம்மாண்டத்தை யாரும் முழுமையாக உணரமுடியவில்லை.

கோபுரத்தின் நான்கு நிலைக்கற்களிலும் மிகவும் நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பூத கணங்கள், பெண் தெய்வங்கள், தாமரை மாலைகள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிற்ப சாஸ்திரத்தின்படி சாலை விமானங்கள், கூடு ஆகியவற்றை அழகாகவும், பெரிதாகவும் அமைத்துள்ளனர். ஒரு விரல் அளவுள்ள சிவலிங்கங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் அதில் முக அலங்காரம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இராஜ கோபுரத்தைச் சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூபாய்.2.60 கோடி ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபோல முற்றுப்பெறாத ராஜகோபுரங்கள் மதுரைக்கு அருகில் அழகர்கோயில் மற்றும் திருவேடகத்திலும் உள்ளன.

 மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கப்படவிருக்கும் நிலையில், கும்பாபிஷேகத் திருப்பணி வேலைகளுடன் ராஜகோபுரத்தை முழுமையாகக் கட்டியெழுப்பும் பணிகளையும் தொடங்கி முடிக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் சிற்பக் கலை கற்ற, தொல்லியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுகுறித்த கருத்து தெரிவித்த பக்தர்கள் “முன்பெல்லாம் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களை மதுரைக்குள் எங்கிருந்து பார்த்தாலும் பார்க்கமுடியும். பக்கத்து கிராமங்களுக்கே கூடத் தெரியும் ஆனால் கடந்த 30 வருடமாக தற்போது, கட்டிடங்களுக்கான உயரக் கட்டுபாடு விதிகளை யாருமே பின்பற்றாததால் கோவிலுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கூட பார்த்தால்கூட கோவில் கோபுரங்கள் தெரிவதில்லை. ராஜ கோபுரம் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டால் இருக்கும் நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மதுரையின் அடையாளமாக மீட்கப்பட வேண்டும் என்பதும் அதற்கு தொல்லியல் துறை சார்ந்த 200 மீட்டர் ரேடியேஷன் ரெகுலேட்டட் ஏரியா அனுமதி படிவம் தாக்கல் செய்யாமலேயே நகர் ஊரமைப்புத் துறை ஊழல் செய்து அனுமதி பலர் பெற்ற காரணமாக பல கட்டிடங்கள் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகமும் அரசும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தினால் நல்லது” என்பது அனைவரும் எதிர்பார்க்கும் நிலையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...