முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

கிழக்குக் கடற்படைத் தலைமையகத்தில் குடியரசு தின அணிவகுப்பு


73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஐஎன்எஸ் சர்கார்ஸில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் 26 ஜனவரி 2022 அன்று அணிவகுப்பு நடைபெற்றது.

கிழக்குக்  கடற்படைத்  தலைமையக தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  அனைத்து கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தளங்களைச்  சேர்ந்த கடற்படை வீரர்களை உள்ளடக்கிய படைப்பிரிவுகளை அவர் பின்னர் ஆய்வு செய்தார்.

அணிவகுப்பு நடத்தும் அதிகாரியாக வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இருந்தார். அனைத்து பிரிவுகளைச்  சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். விழாவின் போது கொவிட் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை ஒழித்து துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக நவீன் குமாருக்கு நவ  சேனா பதக்கம் வழங்கப்பட்டது. இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படைக்கு ஆற்றிய ஒட்டுமொத்தப்  பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ராகுல் விலாஸ் கோகலேவுக்கு நவ  சேனா பதக்கம் வழங்கப்பட்டது. திறம்பட பங்காற்றிய இதர வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களிடம் உரையாற்றிய தளபதி, வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியரசு தின வாழ்த்துகளைத்  தெரிவித்தார். குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நமது அடிப்படை உரிமைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை அறிந்து கடைப்பிடிப்பதும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார்.அந்தமான் & நிகோபாரில் குடியரசு தினக் கொண்டாட்டம்

73-வது குடியரசு தினத்தைக்  கொண்டாடும் வகையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேரில் உள்ள நேதாஜி அரங்கில் 26 ஜனவரி 2022 அன்று அணிவகுப்பு நடைபெற்றது.


நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரான துணைநிலை ஆளுநர், அட்மிரல் (ஓய்வு) டி கே ஜோஷி அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியக்  கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் சந்தீப் ஆர் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக்  காவல்படை மற்றும் அந்தமான் & நிக்கோபார் காவல்துறையினர் பங்கேற்றனர்.


தலைமை விருந்தினரால் தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அரசின் அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் கொவிட் நெறிமுறைகள் நிகழ்வின் போது பின்பற்றப்பட்டன.வருமான வரித்துறை அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

நாட்டின் 73-வது குடியரசு தின விழா, சென்னையில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  சென்னை ஆயக்கர் பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு & புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை முதன்மைத் தலைமை ஆணையர் திருமதி.கீதா ரவிச்சந்திரன், தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.   முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வருமான வரித்துறையின் ஓய்வுபெற்ற தலைமை ஆணையர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசிய முதன்மைத் தலைமை ஆணையர் திருமதி.கீதா ரவிச்சந்திரன்,  நல்லாட்சி  மற்றும் வரி நிர்வாகத்தின் இரண்டு  முக்கியத் தூண்களாகக் கருதப்படும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த  தமிழ்நாடு & புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை உறுதிபூண்டுள்ளது என்றார்.    நேரடி வரி வசூலில் அதிக பங்களிப்பை வழங்கிய 4-வது பெரிய மண்டலமாக, தமிழ்நாடு & புதுச்சேரி மண்டலம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.   இந்தாண்டிற்கான வரிவசூல் குறியீட்டில், 82%-ஐ எட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.   கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட சுமார் 9ஆயிரம் கோடி ரூபாய்  திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட திருமதி.கீதா ரவிச்சந்திரன்,  முக அறிமுகமற்ற மதிப்பீடு மற்றும் மேல்முறையீடு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, வரிசெலுத்துவோரின் சுமைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.     இத்திட்டம் முழு வெற்றியடைவதை, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமனதுடன் செயல்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

குடியரசு தின விழாவையொட்டி, வித்வான் ராமகிருஷ்ணன் மூர்த்தி மற்றும் அவரது குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றதாக, வருமானவரித்துறை  தலைமையிட கூடுதல் ஆணையர்((நிர்வாகம் மற்றும் டிபிஎஸ்) திரு.வி.வித்யாதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை இந்தியன்ஆயில் பவனில் குடியரசு தினக் கொண்டாட்டம்

செயல் இயக்குநர் (வட்டார சேவைகள்) திரு. K.சைலேந்திரா அவர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன்ஆயில் பவனில், இந்தியக் குடியரசுத் திருநாளன்று தேசிய மூவர்ணக் கொடியை மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.

திரு. K.சைலேந்திரா., தமது சிறப்புரையில் கூறியதாவது - இந்த ஆண்டின் கருப்பொருளான பசுமையான வருங்காலத்தை வடிவமைத்தல் என்பது உணர்த்துவதற்கு ஏற்ப பசுமை ஆற்றலை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 2030 ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரத்தைப் பொறுத்த வரை, 500 GW என்கிற இலட்சியப்பூர்வ இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்த முன்முயற்சிக்கு உறுதுணை புரியும் வகையில் இந்தியன்ஆயில் நிறுவனம், தங்களுடைய பசுமை ஆற்றல் ஆதார அளவைப் பெருக்கும் நடவடிக்கைகளில் அயராது ஈடுபட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ளவாறு இந்தியாவில் அமைக்கப்பட உள்ள 10000 EV சார்ஜ் செய்யும் நிலையங்களில் 50% பங்களிப்பு நம்முடையதாக இருக்க, 5000 EV சார்ஜ் செய்யும் நிலையங்களை நாம் அமைக்க உள்ளோம்.

தூய்மையான மற்றும் நம்பகமான ஆற்றல் ஆதார வளமாக ஹைட்ரஜன் உள்ளது. அந்த ஆற்றல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம். ஹைட்ரஜன், தேசத்திற்கு ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது ஒரு புறமிருக்க, ஃபயூவல் செல் ஊர்திகளில் அதனைப் பயன்படுத்துவதால் விளையும் சுற்றுச்சூழல் நன்மைகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பேசுகையில் தெரிவித்தாவது - ஹைட்ரஜன் சார்ந்த முன் எடுப்புகளில் இந்தியன்ஆயில் நிறுவனம் முன்னோடியாக செயல்பட்டு ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்து தீர்வுகளை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியன்ஆயில் நிறுவனம், 15 பாலிமர் எலக்ட்ரோலைட் மெம்ப்ரேன் (PEM) ஃப்யூவல் செல் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றுள்ளது. இந்த செயல்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் - தற்சார்பு இந்தியா-ஆத்மநிர்பர் பாரத் என்பதை நனவாக்கும் வகையில் ஃப்யூவல் ஸ்டேக்/சிஸ்டம் தொழில்நுட்பமானது உள்நாடு சார்ந்து வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என்றார்.


தற்போதைய பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடு காரணமாக, ஊழியர்கள், ஜும் வழியாக நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். இந்தியன்ஆயில் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவினர் அணிவகுப்பு பேரணியை நடத்தினார்கள். இணையம் வாயிலாக, முறையே 25 மற்றும் 30 ஆண்டுகள் பணிக் காலத்தை நிறைவு செய்த ஊழியர்களுக்கு நீண்ட கால பணிச் சேவை விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியன்ஆயில் நிறுவன குடும்ப அங்கத்தினர்களின் உள் வட்டத் திறமையாளர்களால் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

 V. வெற்றி செல்வ குமார், பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்), இந்தியன் ஆயில், தெற்கு மண்டல மார்க்கெட்டிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு தின விழா, வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் சிறப்பான முறையில் இன்று காலை 8 மணியளவில் கொண்டாடப்பட்டது.

73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திரு தா கி ராமச்சந்திரன், இ ஆ ப., வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழாவின் சிறப்புரையில் வ உ சிதம்பரனார் துறைமுகத் தலைவர் திரு தா கி ராமச்சந்திரன், இ ஆ ப., உலகளாவிய கடற்சார் வர்த்தகத்தில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இச்சூழலிலும் கூட நம் வ உ சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டின் டிசம்பர் மாதம் வரை 26.05 மில்லியன் டன் சரக்குகளையும், சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரை 5.93 லட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு கடந்த நிதியாண்டுடன்  ஒப்பிடுகையில் 10.37 சதவீதம் அதிகம் கையாண்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்ததை நினைவுகூரும் விதமாக இந்திய அரசு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின்கீழ் பல்வேறு கொண்டாட்டங்களை வ உ சிதம்பரனார் துறைமுகம் நடத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக துறைமுக வளாகத்தில் தமிழ்நாட்டின் கடற்சார் வாணிபத்தினை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு கடற்சார் அருங்காட்சியகம் மற்றும் வஉசி அருங்காட்சியகமும் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் தம் நாட்டின் உட்கட்டமைப்பு துறைக்காக இந்திய அரசு கதிசக்தி எனும் பல்முறை இணைப்புகளுக்கான தேசிய திட்டத்திற்கு கைகோர்க்கும் விதமாக நமது துறைமுகத்தில் சரக்கு தளம் ஒன்பதினை 3 வது சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல், வடக்கு சரக்கு தளம் 3-னை இயந்திரமயமாக்குதல் மற்றும் சரக்கு தளம் 1,2,3 மற்றும் 4-ஐ சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.மேலும் அவர் தனது உரையில் துறைமுக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சிறப்பான பணி, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு மற்றம் துறைமுக உபயோகிப்பாளர்களின் சீரிய செயல்பாட்டிற்கு நன்றி தெரிவித்துடன் வ உ சிதம்பரனார் துறைமுகம், நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் சிறந்த சரக்கு பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2020-2021 ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களான கப்பல் முகவர்கள், ஸ்டிவிடோர், சுங்கத் துறை முகவர், சரக்கு பெட்டகம் இயக்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.  மேலும் துறைமுகத்தில் மிகச்சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது                    காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில்  73 வது குடியரசு தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளி நிர்வாக இயக்குனர்  அருண் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சங்கத் தலைவர் .RTN.திஷாந்த் குமார் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்வில்  சங்க உறுப்பினர்கள் RTN. சிவசுப்பிரமணியம் RTN.G.முத்துக்குமார்,   RTN. தனசேகரன். RTN. நாகலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.