இராணுவ தினத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட நிகழ்வு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

திருவள்ளுவர் தினத்தன்று மகான் திருவள்ளுவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

திருவள்ளுவர் தினத்தன்று மகான் திருவள்ளுவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி  புகழாரம் சூட்டியுள்ளார்.


ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது 

"திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன். https://t.co/B7JuOMLjRo"ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்


ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர்  திரு. நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:


"ராணுவ தினத்தன்று   நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் மதிப்பிற்குரிய அதிகாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிறப்பான நல்வாழ்த்துக்கள். இந்திய ராணுவம் அதன் வீரத்திற்கும் தொழில்முறைக்கும் நன்கு அறியப்பட்டதாகும். தேசத்தின் பாதுகாப்புக்கு இந்திய ராணுவத்தின் விலைமதிப்பில்லா பங்களிப்புக்கு வார்த்தைகளால் நீதி வழங்க முடியாது
எதிரிகள் தாக்கக்கூடிய பகுதிகளில் இந்தியா ராணுவ வீரர்கள் பணியாற்றுகிறார்கள். இயற்கைச்  சீற்றங்கள் உட்பட மனிதகுலத்திற்கு நெருக்கடிகள் ஏற்படும்போது சக மக்களுக்கு உதவி செய்ய முன்னணியில் இருக்கிறார்கள். அதே போல் வெளி நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறந்த பங்களிப்பு இந்தியாவுக்குப்  பெருமிதம் அளிக்கிறது."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்