விசாகப்பட்டினம் கடற்படை தளத்துக்கு, ‘பல்ராஜ இழுவை படகு விநியோகம்

 விசாகப்பட்டினம் கடற்படை தளத்துக்கு, ‘பல்ராஜ  இழுவை படகு விநியோகம்

‘பல்ராஜ்  என்ற 50 டன் இழுவை படகை, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில், இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் இன்று வழங்கியது.

கடற்படை போர்கப்பல்களை துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும், வெளியே அனுப்பவும், 50 டன் எடையுள்ள 3 போல்லார்டு இழுவை படகுகளை ரூ.260.70 கோடி செலவில் உருவாக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இவற்றில் ‘வீரன்’ மற்றும் ‘பல்ராம்’ என்ற 2 இழுவை படகுகள் கடந்த அக்டோபர் மாதம் விசாகப்பட்டினம் மற்றும் மும்பை கடற்படை தளங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. தற்போது 3 வது இழுவை படகு ‘பல்ராஜ்’ விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இன்று விநியோகிக்கப்பட்டது.

இந்த இழுவை படகுகள், கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்பட மிகப் பெரிய போர்க்கப்பல்களையும் துறைமுகத்துக்குள் இழுத்துக் கொண்டு செல்லும் திறன் படைத்தவை.  தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த இழுவை படகுகள் தயாரிக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கு மத்தியிலும், இந்த இழுவை படகுகளை தனது அயராத முயற்சியால் இந்துஸ்தான் நிறுவனம், கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்