முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!

சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!


சிதம்பரத்தில்  அருகில் புவனகிரி சாலை பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற ஜெயஷீலா( வயது 36),  நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச்  சென்றதாகவும். பின்னர் அவர் சிற்றம்பல மேடையிலேறி சாமி தரிசனம் காண முயன்றதாகவும் உடனே தீட்சிதர்கள் சிலர் ஜெயஷீலாவை ஆபாசமாகத் திட்டி திருப்பியனுப்பியுள்ளது குறித்து சிதம்பரம் நகர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் . ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த பெண் என தன்னை கோவில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டி சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாகக் கூறியிருந்தார்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. செய்யப்பட்ட நிலையில்


 

தீட்சிதர்களிடையே வாக்குவாதம் எழுந்தது.

பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றபோது சாதிப்பெயரை சொல்லித் திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சிப் புகாரளித்த சக தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் வந்த பிரச்சினைகள் குறித்து


சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி நீக்க நடவடிக்கைக்குள்ளான கணேஷ் தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை 3 தீட்சிதர்கள் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபைக்கு அழைத்துச் சென்றபோது கனகசபை மீது ஏறக் கூடாதென தீட்சிதர்கள் தடுத்து சாதிப் பெயரைக் கூறி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தாரர்.


அந்தப் புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயஷீலா அளித்த புகாரில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீதும் கூட்டமாகச் சேர்ந்து தடுத்தல், தாக்குதல், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


 நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர் என்பவர், கோவில் விதிமுறைகளுக்கு முரணாக கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். கனகசபை மீது ஏற முயன்ற போது அவர்களை சக தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். சோழர்கள் காலத்தில் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இது தவறானது.


காவல்துறையில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 தீட்சிதர்களும் கோவிலுக்குள் தான் இருக்கின்றனர். பூஜை செய்கின்றனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோயில் தீட்சிதர்கள் எங்களிடம் சொல்கின்றனர். நடராஜர் கோயிலின் கனகசபை மீது அனைவரும் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். பழைய முறைப்படி அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். பெரும்பான்மைகோயிலில் எந்தவித தீண்டாமையும் இல்லை.


அணைத்து மதத்தினரும,பல சமுதாயத்தினரும் வருகிறார்கள். இந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு பக்தர்களும் கோவிலுக்கு வருகிறார்கள். யாரையும் தவறாகப் பேசுவதில்லை. கோவிலின் நலன் கருதி சில சட்ட திட்டங்கள் வகுத்து  கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறக்கூடாது என உத்தரவு போடப்பட்டு, எல்லோரும் அதைக் கடைபிடித்து வருகிறார்கள்.  தீட்சிதர்கள் சக்தி கணேசன், தர்ஷன் மட்டும் விதிமுறைகளை மதிக்காமல் சம்பந்தமில்லாத பெண்களை கனகசபைக்கு அழைத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவத்தில், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு பெண் தவறுதலான புகாரை தெரிவித்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷன் தீட்சிதர் கோவிலில் ஒரு பெண் பக்தரை அடித்து பிரச்சினை செய்ததால் அது சட்டங்களை மீறியதாக் கருதி, அவருக்கு அபராதம் விதித்து பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது பழி தீர்ப்பதற்காக இதுபோன்ற வேலைகளைச் செய் கிறார்.

மேலும் கோவிலில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், நிர்வாகத்துக்கு எதிராக கருத்துகளை கூறியதற்காக தர்ஷன் தீட்சிதருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்தத் தவறினால் மீண்டும் பணி நீக்கம் செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் சக்தி கணேசன் தீட்சிதர், காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாக பொய்யான புகார் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான கருத்தின் அடிப்படையில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத் தரவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷன் தீட்சிதர், “நடராஜர் கோவிலில்  தீட்சிதர்கள் எப்படி சுவாமி தரிசனம் செய்கிறார்களோ, அதேபோல் பக்தர்களும் தரிசனம் செய்ய வேண்டும். கோயிலில் நடைபெறும் சில அநியாயங்களை எனது தந்தையும் நானும்தட்டிக் கேட்பதால், எங்களை கோயில் நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். ‘பக்தர்களை கனகசபையில் ஏற்றக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது மன்னர் கட்டிய கோவில். கால காலமாக கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நடைமுறை மீண்டும் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...