முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2022-22-ம் ஆண்வு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக் கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை

2022-22-ம் ஆண்வு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக் கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’


இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக்  கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’.  இது கோவிட்-19 பெருந்தொற்றைச்  சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையில் அமல்படுத்தப்பட்டது.  பல தரப்பினரின் கருத்துக்கள், நிகழ்நேர கண்காணிப்பு, இலகுவான நடவடிக்கைகள் மூலம் இந்த விரைவான மற்றும் சுறுசுறுப்பான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதாக பொருளதார ஆய்வறிக்கையின் முன்னுரை தெரிவிக்கிறது. 


கருத்துகேட்பு அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் எப்போதும் சாத்தியமாக இருந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிகழ்நேர தரவுகள், தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உதவுவதால், விரைவான, சுறுசுறுப்பான திட்டம் இன்று பொருத்தமாக உள்ளது. ஜிஎஸ்டி தகவல்கள், டிஜிட்டல் முறையிலான கட்டணங்கள், செயற்கைகோள் புகைப்படங்கள், மின்சார உற்பத்தி, சரக்குப்  போக்குவரத்து, உள்நாட்டு/வெளிநாட்டு வர்த்தகம் போன்ற தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.

இவற்றில் சில பொதுத்  தளங்களில் இருந்தும், பல புதுமையான முறைகளில் தனியார் துறையினரால் பெறப்படுகிறது.

* இந்தப்  பொருளாதார ஆய்வறிக்கையின் மற்றொரு சிறப்பம்சம், கலை மற்றும் அறிவியல் கொள்கை தாயாரிப்புடன் தொடர்புடையது. இது கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைபற்றியது அல்ல, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றம், நுகர்வோர் நடவடிக்கை, விநியோக சங்கிலிகள், சர்வதேச நிலவரங்கள், பருவநிலை மாற்றம் உட்பட பல காரணங்களால் கோவிட் தொற்றுக்கு பிந்தைய நீண்டகால நிச்சயமற்ற தன்மை பற்றியது. இந்த நிச்சயமற்ற தனமையை  அங்கீகரிப்பது, நீண்டகால விநியோக பாதுகாப்பு யுக்தியைக்  தெரிவிப்பதாக உள்ளது :  ஒரு புறம் புத்தாக்கம் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள்,  அதே நேரத்தில் மறுபுறம் பொருளாதா மீட்புக்கான முதலீடு, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் மிகப் பெரிய நடவடிக்கைகள்.பாதுகாப்பு குறித்த மத்திய அரசின் பல நடவடிக்கைகளையும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒழுங்குமுறையில் தளர்வு, எளிதான நடைமுறை, தனியார் மயமாக்கம், அன்னியச்  செலாவணி கையிருப்பு, பணவீக்க இலக்கு, அனைவருக்கும் வீடு, பசுமைத்  தொழில்நுட்பம், திவால் மற்றும் நொடிப்பு விதிமுறைகள், ஏழைகளுக்குச்  சுகாதார காப்பீடு, நிதி உள்ளடக்கம், கட்டமைப்புக்கான செலவினம், நேரடிப்  பணப்  பரிமாற்றம் போன்ற மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான தொடர்புகளை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என இந்தப்  பொருளாதார ஆய்வறிக்கை எதிர்பார்க்கிறது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முதல் ஆய்வறிக்கைக்கு பிந்தைய ஆய்வறிக்கை ஆவணம் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.


இந்த இரட்டை அறிக்கைக்கு பதில் தற்போது, ஒரே ஆய்வறிக்கையாகவும், புள்ளி விவரங்களுக்கு தனி அறிக்கையாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டுப்  பொருளாதார ஆய்வறிக்கை 900 பக்கங்கள் கொண்டாதாகத்  தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ஆய்வறிக்கை ஒரே புத்தமாகவும், புள்ளிவிவரங்களுக்குத்  தனி அறிக்கையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை அடுத்த சில ஆண்டுகளில் புதிய வகையான சமூக-பொருளாதாரத் தரவுகளை உள்ளடக்கிய பின்னூட்ட சுழற்சி அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று நம்புகிறது. மேலும் இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் நகரமயமாக்கல், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், வேளாண் நடைமுறைகள் போன்றவற்றை விளக்குவதற்கு செயற்கைகோள் தரவுகளும், படங்களும் பயன்படுத்துப்பட்டுள்ளன.பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்

2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது

2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது

பெருந்தொற்று: அரசின் விநியோக சீர்திருத்தங்கள் நீடித்த, நீண்டகால விரிவாக்கத்திற்குப் பொருளாதாரத்தைத் தயார் செய்துள்ளது

2021 ஏப்ரல் – நவம்பர் காலத்தில் (சென்ற ஆண்டை விட) மூலதனச் செலவுகள் 13.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும்

2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது

2022 -23-ன் சவால்களை எதிர்கொள்ள பருண்மைப் பொருளாதார நிலைத்தன்மைக் குறியீடுகள் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன

வருவாய் வரவுகளில் பெருமளவு வளர்ச்சி

சமூகத் துறை: சமூக சேவைகள் மீதான செலவு 2014-15-ல் 6.2 சதவீதம் என்பதோடு ஒப்பிடுகையில், 2021-22-ல் ஜிடிபி விகிதத்திற்கேற்ப 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது

பொருளாதாரம் மீட்சியடைந்ததையடுத்து 2020-21-ன் கடைசி காலாண்டில் வேலைவாய்ப்புக் குறியீடுகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் வந்துள்ளன

வணிகம் சார்ந்த ஏற்றுமதிகளும். இறக்குமதிகளும் வலுவுடன் மீட்சியடைந்து கொவிடுக்கு முந்தைய நிலைகளைக் கடந்துள்ளன

2021 டிசம்பர் 31 நிலவரப்படி வங்கிக்கடன் 9.2 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது

ஐபிஓ-க்கள் (மக்களிடமிருந்து நிறுவனங்கள் மூலதனத்தை திரட்ட அனுமதிப்பது) மூலம் ரூ.89,066 கோடி திரட்டப்பட்டுள்ளது; கடந்த 10 ஆண்டில் எந்த ஆண்டையும் விட இது உயர் அளவாகும்

2021 – 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்) ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் 5.2 சதவீதமாக உள்ளது

2021  - 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்)  சராசரி உணவுப் பணவீக்கம் 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது

தீவிரமான விநியோக நிர்வாகம் காரணமாக மிகவும் அத்தியாவசியமானப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் உள்ளன

வேளாண்மை: 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது

ரயில்வே: 2020-21-ல் மூலதனச் செலவினம் கணிசமாக ரூ.155,181 கோடிக்கு அதிகரிக்கப்பட்டது; 2021-22-ல் இது ரூ.215,058 கோடி அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2014-வுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகமாகும்2020 -21-ல் நாளொன்றுக்கு சாலை அமைத்தல் 36.5 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது – முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30.4 சதவீதம் அதிகமாகும்

நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) : 2020-21-ல் நித்தி ஆயோகின் தரவுப் பலகையில் ஒட்டு மொத்த ஸ்கோர்

66-க்கு முன்னேறி உள்ளது

மத்திய நிதி மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 2021-22 –க்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பொருளாதார நிலை:

2020-21-ல் 7.3 சதவீதம் என்பதற்கு மாறாக 2021-22-ல் (முதலாவது மதிப்பீட்டின்படி) உறுதியான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022 -23-ல் உறுதியான நிலையில் 8-8.5 சதவீத அளவிற்கு ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு உதவி செய்ய நிதிமுறை நல்ல நிலையில் இருப்பதால் வரும் ஆண்டில் தனியார் துறை முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 – 23 ஆம் ஆண்டுக்கு ஜிடிபி வளர்ச்சி முறையே உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் 8.7 சதவீதம், 7.5 சதவீதம் என்ற சமீபத்திய மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டவையாகும்.

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்ட மதிப்பீடுகளின்படி இந்தியாவின் ஜிடிபி 2021 – 22, 2022 – 23-ல் 9 சதவீத வளர்ச்சி, 2023 – 2024-ல் 7.1 சதவீத வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து 3 ஆண்டுகளிலும் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும்.

2021-22-ல் வேளாண்மை மற்றும் துணை தொழில்களில் 3.9 சதவீதமும் தொழில் துறையில் 11.8 சதவீதமும், சேவைகள் துறையில் 8.2 சதவீதமும் வளர்ச்சி  எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையைப் பொறுத்தவரை 2021-22-ல் நுகர்பொருள்கள் 7.0 சதவீத வளர்ச்சியும், ஒட்டுமொத்த மூலதன உருவாக்கம் 15 சதவீதமும், ஏற்றுமதி 16.5 சதவீதமும், இறக்குமதி 29.4 சதவீதமும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...