முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை பெருநகர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது ஆளும் திமுக கூட்டணி.

சென்னை பெருநகர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது ஆளும் திமுக கூட்டணி.


ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிய பணம்! அள்ளித் தரப்படும் பரிசுப் பொருட்கள். இத்யாதிகள் என  ஏதோ, பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக பேரூராட்சி,நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் உண்மையாகவே அதிர்ச்சியளிக்கின்றன!


நம்மை நாமே சுரண்டிக் கொழுப்பதற்குத் தரும் அங்கீகாரமா? உள்ளாட்சி தேர்தல்கள் என்ற கேள்வியை நம்மால் தவிர்க்க முடியவில்லை. சாதாரண வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். 600 வாக்குகள் கொண்ட ஒரு வார்டில் இரண்டரைக் கோடி ரூபாய் செலவு செய்து வென்ற ஒரு வேட்பாளரும் உண்டு, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து சேவைகள் செய்த பிறகு மனைவியை வேட்பாளராக நிறுத்தி எந்தச் செலவும் செய்யாமல் ஒரு ஊதா நோட்டீஸ் மட்டுமே அடித்து வெற்றி கண்ட கவுன்சிலரும் உண்டு .



”எங்க வேட்பாளர் இத்தனை ஸ்வீட் பாக்சை இறக்கியிருக்கிறார்” என்கிறார் ஒரு..... கட்சிக்காரர்!

”எங்க ஆளு இத்தனை ரோஸ்மில்க் தருவாராக்கும்” என்கிறார் ஒருவர்!

”அந்த ஏரியாவுல ஆயிரம் சாக்லேட் சப்ளை பண்ணியாச்சு நாங்க” என்கிறார் ஒருவர்!

இதெல்லாம் மக்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் சொல்லுகின்ற குறியீட்டுச் சொற்கள்!




இது தொண்டு செய்வதற்கான பொறுப்பு! இதில் போட்டியிடுபவர் இவ்வளவு பணம் செலவழிப்பானேன்? என்ற வினா எழாமல் இல்லை.... தேர்தல் அலுவலர்கள் பலர்  பறக்கும் படை என்ற பெயரில் சோதனை நடத்தி வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் சூழல் நாம் நன்கு அறிவோம் அதில் வியாபாரம் செய்து பிழைக்கும் நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இது தேவையா என்பது எழு வினா.?


திமுகவின் வெற்றி எதிர்பார்த்தது தான்.‌ பத்து ஆண்டுகள் பொறுமையாக கட்சிப் பணியாற்றியதற்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு. திமுக

தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது சிறப்பு.‌ திமுக ஒரு தெளிவான அரசியல் குடும்பம் என்பதை மெய்ப்படுத்தியுள்ளது.‌ 



பாரதிய ஜனதா கட்சியின் அடிவருடியாக இருந்ததன் துர்பலனை அதிமுக கண்கூடாக அனுபவிக்கிறது.‌ பாஜக சார்ந்த  இபிஎஸ் + ஓபிஎஸ் மேலும் 10 நபர்கள்  கட்சியை விட்டு தானே விலகினால் அஇஅதிமுக இரட்டை இலை மீண்டும் துளிர்க்க வாய்ப்பு உள்ளது.




பாஜக முதன்முதலாக ஒரே கட்சியாக தேர்தல் பணியாற்றக் கற்றுக் கொண்டது சிறப்பு. மற்றபடி நரேந்திர மோடி பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் இன்னும் குறையவில்லை என்பதே உண்மை.



அமமுக தனது பலம் வாய்ந்த இடங்களில்  துளிர் விடத் தொடங்கி விட்டது. வழக்கம் போல காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக எல்லாம் திமுகவின் பலத்தால் வெற்றிகரமாக உள்ள நிலையில். சேலம் மற்றும் கடலோரப் பகுதி கூடக் கைவிட பாமக மிகவும் கவனமாக காய் நகர்த்த வேண்டிய நேரமிது.‌ கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் இனி மெல்லச் சாகும். சீமானின் நாதக என்றுமே பாஜகவால் முடியாததை சாதிக்கும் நிழலாகத் தொடரும்.‌ 



உள்ளாட்சியில் நல்லாட்சி மலர வாழ்த்துகள். சென்னை பெரு நகர மாநகராட்சியின் முதல் தேர்தல். 4 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி. போற்றுதலுக்கு உரியது.

2-23-92-198  வார்டு பிரிவு மக்களுக்கு வாழ்த்துக் கூறலாம் இத்தனை பண வலிமை, அடியாள் வலிமையையும் மீறி தனி நபர்களை கொண்டாடிய மக்கள். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட பொறியியல் கல்லூரி மாணவி வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 8 பேரில் 7 பேரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் முதல்வர் தகவலில். "ஒன்பது மாத கால DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த UrbanLocalBodyElection முடிவுகள்!




வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்!

மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்!" எனத் தெரிவித்துள்ளார்..  சென்னை மாநகரத்தில்  கவுன்சிலரானார் பாஜகவின் "உமா ஆனந்தன்!




இவர் பேசிய பேச்சுகள் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர் சாதி ரீதியாக பல மேடைகளில் பேசி இருக்கிறார். இதனால் இந்தப் பகுதியில் பிரபலமானவராக அறியப்பட்டார் உமா ஆனந்தன்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில், மொத்தம் 15 பேர் போட்டியிட்டதில் மூன்று பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 12 பேர் களத்திலிருந்தனர். அதிமுக சார்பில் அனுராதா பாலாஜியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசீலா கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டார்கள். பாஜகவில் இருந்து போட்டியிட்ட  வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரை விட 2036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உமா ஆனந்தன் 5539 வாக்கும், காங்கிரஸ் வேட்பாளர் 3503 வாக்குகளும், அதிமுக 2695 வாக்குகளும் பெற்றுள்ளனர். உமா ஆனந்தன் வெற்றியை அடுத்து, பாஜக சென்னையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

உமா ஆனந்தன் தன்னை ஒரு கோட்ஸே ஆதரவாளர் என்று சொல்லித்தான் பிரசாரம் மேற்கொண்டார். கோட்ஸே குறித்து இவர் அளித்த பேட்டி இணையம் முழுக்க சர்ச்சையானது. கோட்ஸே காந்தியை சுட்டார். ஆம் அது அவரின் நியாயாம். அவர் ஒரு இந்து. இப்பவும் சொல்கிறேன், எனக்கு அது மிகவும் பெருமையாக உள்ளது. கோட்ஸே உமா ஆனந்தன் நான் பெருமையாக சொல்கிறேன். நான் ஒரு கோட்ஸே ஆதரவாளர், என்று உமா ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும் உமா ஆனந்தன் பேசியது சர்ச்சையானது. இதுவும் சமூகவலைதளத்தில் பெரிய விவாதமாக மாறியது.

உமா ஆனந்த் இப்படி கோட்ஸேவிற்கு ஆதரவாக பேசிய வீடியோ இணையம் முழுக்க பரவியது. இவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தது. எந்த அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இணையதளத்தில் உள்ள பலர் கேள்வி எழுப்பினர். தற்போது உமா ஆனந்தன் வெற்றி பெற்றிருப்பதை பாஜக கொண்டாடுகிறது. பெரியார் மண்ணில் கோட்ஸே என்ற அடைமொழியுடன் உமா ஆனந்தனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.      அதிமுக தொண்டர்கள் கவனத்திற்கு. இது பகடியோ, எகத்தாளமோ அல்ல.

அப்பட்டமான நெற்றிப் பொட்டில் அறையும் உண்மை. 

அதன் தொண்டர்கள் கட்சியின் மீது அக்கறை இருந்தால் தலைமை மாற்றத்திற்கான போர் குரல் எழுப்பி உங்கள் அரசியல் எதிர்காலத்தில் அதிமுகவில் இருக்க வேண்டும் என்றால் வழி தேடவேண்டிய நேரமிது .

பயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். என்று பலர் அதிலும் அதிமுகவினர் தற்போது தான் உண்மை உணர்ந்து பேசி வருகின்றனர் என்பதை நாம் காணும் நிலை.அதிமுக எம் ஜி ஆர் காலத்தில் முதல் முதலில் நடத்திய உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வென்றது நெல்லை நகராட்சி மட்டுமே இப்போது அதுவுமில்லை..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...