முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.7 சதவீதம் வாக்குகள் பதிவு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்   60.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதெனத் தேர்தல் ஆணையம் தகவல்.


மாநிலத்திலேயே குறைந்த அளவாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக அளவாக தர்மபுரியில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.    சென்னையில்  பல பகுதிகளில்,  வாக்குப் பதிவு சரிவு பற்றிய பேச்சுத் தான்


தேனீர் கடைகள் தோறும் நடக்கிறது. கிராமங்களில வசதி வாய்ப்பே இல்லே அந்த மக்கள், வாக்குகளை வாரி வழங்கியிருக்காங்க, நகர்ப்புறங்களில் மக்கள்  சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் வசதிகளை அனுபவித்தும் கூட கட்டிடத்தின் மேலிருந்து கீழிறங்கி வாக்களிக்க வரவில்லை. 


இன்னொரு பகுதி பக்கம் ஆட்சி மீது அதிருப்தி இருந்தால் வாக்குப்பதிவு எகிறும், இப்போது அப்படி எகிறாததைப் பார்க்கும் போது ஆளும் கட்சிக்கு வாய்ப்பு அதிகம் போலத் தான்  தெரிகிறது ! சென்னையில் மட்டுமே அதிருப்தியும் - திருப்தியும்  வேறு மாதிரி இருப்பது தான் புரியாத புதிர் !  தேர்தல் ஆணையம் சொல்லிய எல்கையை மீறாமல் தான் வேட்பாளர்கள் பிரசாரம் செய்தார்களான்னு பார்க்க வேண்டும்

கொஞ்சம் உண்மையோடு நோக்கினால். மேளமும், தாளமும், பட்டாசும், மோட்டார் சைக்கிள் ஊர்வலம் என ஒரே கலக்கல் தான் ,மேலும் சுவரொட்டி ஒட்டவில்லை என்பதெல்லாம் சரி, பிட் நோட்டீசைக் கூட எத்தனையோ கலர்களில் பெரிய சைஸில் வேட்பாளர்கள் பறக்க விட்டது மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியில்

இருக்குற சட்டமன்ற உறுப்பினர்ரோட மனைவி தன் கணவரின் பிரசார ஆசிர்வாதத்தோடு சுயேச்சையாகப் போட்டியிட்டு களத்துல இருப்பதைப் பற்றிக்கூட பேசலாம், எழுதலாம், ஆனால்.  அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கைய இதுவரை  எடுக்கவில்லை.  அரசு வழக்கறிஞர் பதவியை விட கவுன்சிலர் பதவி பெரியது என ராஜினாமா செய்துவிட்டு ஒருவர் கட்சியோட வேட்பாளரா வார்டுல நிக்க. வேட்பாளர் சீட்டு இவருக்குத்தான்னு தலைமை முடிவு செயத பிறகு அவருக்கு ஏன் அரசு வழக்கறிஞர் பதவியைக் கொடுக்கணும்   என்பதே வினா?     

இப்போது நாம் குறிப்பிட்ட விஷயங்கள் சென்னை - மற்றும் சென்னைக்கு அருகாமையிலுள்ள பகுதிகளில் நடந்தவைகள் தான்... இதெல்லாம் மக்களின் மனப்புழுக்க வறையறைக்குள் தானே வரும்?  வலியோரை எளியோர் வீழ்த்தும் ஆயுதம் தேர்தல் ஒன்று தானே ஜனநாயக நெறிமுறை .பலகட்சிகளைக் காலி செய்துவிட்ட மாநகராட்சித் தேர்தல் களம்.

முழுக்க சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து  நடக்கும் கூத்துக்களை நமது செய்தியாளர் தரும் தகவல்களைப் பார்க்கும் போது ஒன்று தெளிவாகப் புரிகிறது..

இனி மேல் அமமுக பாமக போன்றவை கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகும்.. வசதியுள்ள சுயேச்சைகளோடும் ஆளும்கட்சி கூட்டணி வேட்பாளர்களோடும் தான்





எப்போதும் பத்துபேர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள் சுகமாய்,. நலமாக,

பாரதிய ஜனதா கட்சியிலோ நிலை யாதெனில் மொட்டை போட்டு விட்டு புதிதாய் முடி முளைத்தவன் அடிக்கடி தன்  தலையைத் தடவிப் பார்த்து,  தடவிப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும் விடலைப்பருவ விட்டேத்திகள் போல நிலையில் அடிக்கடி நான்கைந்துபேர் ஒன்று கூடி அவர்களுக்குள்ளேயே

பேசியும் சிரித்தும் சிரித்துப் பேசிக்கொண்டேயிருந்தார்களே ஒழிய வாக்காளர்களோடு சம்பந்தமில்லாதவர்களாகவே தேர்தலில் வாழ்ந்தார்கள்.

தேமுதிக மற்றும் நாம் தமிழர் மற்றும் ம நீ மய்யம் உள்ளிட்ட கட்சியில் எம்பி மற்றும் எம்எல்ஏ கேன்டிடேட் மெட்டீரியல்களாக வலம் வந்த மாவட்டத்தலைவர்கள்

இப்போது கவுன்ஸிலர் ரேஞ்சிற்கு கீழ் இறங்கி வந்துவிட்டது நாம் நன்கு அறிவோம். அடுத்து  இமயம் ஏறி காங்கிரஸ் கட்சியை "களப்பலி"யாக்கி விட்டார்கள் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னணி தலைவர்

டி ஆர் பாலு நேரடியாகவே  ராகுல்காந்தியிடம் சென்று


"உங்களுக்குத் தேவை நம்பர்கள் தானே.எம்பிக்களின் எண்ணிக்கை தானே நாங்க நாற்பது நம்ம அணிக்குக் கொண்டுவருவது எங்கள் தளபதியோட பொறுப்பு."

"அதனால் தமிழ்நாட்டில்  காங்கிரஸுக்கு யாருக்கும் சீட் கேட்காதீங்க.

"நாம நாப்பது நம்மளுதும் நாற்பது" என்று சொன்னால் "ஓகே கேரி ஆன் நோ ப்ராப்ளம்" இளம் தலைவரையும் நம்ப வைத்து டெல்லி இரண்டாம் கட்ட தலைவர்கள்

தலையாட்டுவார்கள். அதைக் கடந்து சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  தயவில் காங்கிரஸ் ஒரு சில கவுன்சிலர் பதவிகளையும் பிடிக்கிறது.

2004 ல் பாண்டிச்சேரியை புதுச்சேரி என்று அன்னை சோனியாவிற்கு புரியாத மாதிரி எழுதி 

"புதுக்கோட்டை போலிருக்கு" என்று அவரை நம்பவைத்து பாண்டிச்சேரியில்  எம்பியை நிறுத்திய நிலையில் 

"ப்ரதர் சீப் ஈஸ் வெரிகுட் பேட்ரியாட் க்ரேட் நேஷனலிஸ்ட்"என்று  எந்த உணர்வும் இல்லாமல் தலைவர் ராகுல் அதை வெளியிட இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தல் உதாரணமாக இருக்கும்.

இனி சாமானியர்கள் தமிழக தேர்தலில் வேட்பாளராக முடியாது கேட்பாளரும் ஆகமுடியாது

மரியாதையாக நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருந்துவிடுவது தான் உத்தமம் அரசியல் வியாபாரம் அரசியல் வா(வியா)திகள் பெறுகிறது தான் இனி தான் ஊழல் ஆரம்பம் என களம் கூறும் செய்தி.



இந்தத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் கோட்பாடுகளையே புரட்டிப் போட்ட தேர்தல்... இனி நியாயம், நேர்மை, எருமை, கருமை. வீனான பெருமை எதையும் பேச முடியாது. அவ்வளவு தான். .

திருச்சிராப்பள்ளியில் ஒரு ஓட்டுக்கு ஒரு கட்சி 2000 மற்ற கட்சி 2000 உடனே ஆளுங்கட்சி மீண்டும் மூவாயிரம் அதற்கும் போட்டியாக எதிர்கட்சி மீண்டும் மூவாயிரம் இப்படி பல  அட பணம் கொடுத்தா தானே நீயும் கொடுக்கற  இதோ தாய்மார்களே எல்லோருக்கும் ஒரு நூற்றி இருபது கிராம் வெள்ளிக் குத்துவிளக்கு என ஒரு கட்சி மிரட்ட சளைக்காத மாற்றுக் கட்சி. ஸ்டோர்ஸில் போய் இந்த கார்ட கொடுங்க

ஒரு மூடை அரிசி பத்துகிலோ கோதுமை மாவு ரெண்டுலிட்டர் கோல்டுவின்னர் மூனு கிலோ வெங்காயம் என பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள். வார்டு வாக்காளப் பெருமக்கள் நிஜமாகவே வணக்கத்திற்குரிய வெட்கம் ..........கள்தான்.


மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்! திருச்சிராப்பள்ளி மட்டுமே இந்த நிலையில் இல்லை பல பகுதிகளில் இதுவே நிலை.


இனி நம்மைப் போன்றவர்கள் அறத்தோடு பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்... சிவகங்கை பகுதியில் நகை மதிப்பீட்டாளரும் மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் தலைவருமான மகேஸ்குமார்  வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அரை குறை உடை அணிந்து வாக்களிக்க வந்தார். இவர் வந்து நின்ற கோலத்தைப் பார்த்ததும், அங்கிருந்தவர்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு அதை பற்றி விசாரித்ததற்கு, தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோரி அரை ஆடை அணிந்து வந்ததாகக் காரணம் கூறினார்.. ஆனாலும், மகேஸ்குமாரை அங்கிருந்த பாதுகாப்பு காவலர் வாக்கு சாவடியில் இருந்து அப்புறப்படுத்தினர். அவர் கூறியதாவது "நகை மதிப்பீட்டாளராக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன். வங்கியில் மனித உரிமை மீறல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.. நகை மதிப்பீட்டாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தியே அரை உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டேன்' என்றார்.. அரை ஆடை கோலத்தில் ஓட்டுப்போட வந்த இந்த ஊழியரால் அந்த பூத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி பல சுவாரஸ்யமான தகவல்கள் உடன் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை வரை நாமும் காத்திருப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த