முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய பங்கு சந்தையின் மந்தனத் தகவல்களைப் பகிர்ந்த சித்ரா கூறும் சாமியார் ஆணந்த சுப்ரமணியன் தானா என்பதே எழு வினா

தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாக  செபி கூறியுள்ளது.


குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பொருளாதார ஆலோசனைகளும் மற்றும் பங்குச் சந்தை ரகசியங்களையும் பகிர்ந்து வந்ததாகப் பேசப்படுகிறது.


குறிப்பாக இந்தச் சாமியரின் வழிகாட்டலின் படியே நிர்வாகத் தலைவரின் ஆலோசகராக ஆனந்த சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செபி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளதில்


ரகசிய மெயில் மூலமாக சித்ராவுக்கு மெயில் வருவதும், அதனை அப்படியே செயல் படுத்துவதுமாக இருந்துள்ளதன் மூலம் ஆனந்த் சுப்ரமணியன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பலன்களைப் பெற்று வந்துள்ளார். குறிப்பாக பங்குச் சந்தையின் ரகசிய தகவல்கள் மூன்றாம் நபருக்கு பகிரப்பட்டுள்ளதால்  அது நிர்வாக குறைப்பாட்டினை சுட்டிக் காட்டுகின்றது. இது மோசமான நடத்தையென செபி தரப்புக் குற்றம் சாட்டியுள்ளது.


இமயமலையிலிருப்பதாகக் கூறப்படும் பெயர் வெளிடப்படாத அல்லது தெரியாத சாமியார் ரிக் யஜூர் சாம என வேதங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள இ.மெயில் ஐடி க்குதான்  ரகசியத் தகவல் பகிரப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதும். இந்த மெயில் படி தான் என் எஸ் இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த சுப்ரமணியனுக்கு, அடுத்தடுத்து மூன்று சம்பள உயர்வளித்து, 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாகவும் செபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..


சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மூன்று கோடி ரூபாய் அபராதமும், ஆனந்த சுப்ரமனியனுக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  மட்டும் அல்ல இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதெனவும் செபி அதிரடியான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.இதில் செபி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவரை?  20 ஆண்டுக்கு முன்னர் தான் பார்த்தேன்.. அதன் பிறகு ஒருசில இடங்களில் சந்தித்தேன். எனக்கு மானசீகமான வழிகாட்டி. அவர் ஒரு தவயோகி என்றெல்லாம் கூறியிருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். ஆனால் சித்ரா சொன்னது அத்தனையும் பொய்யான தகவல்கள் என்பதை சோ கால்ட் சாமியார் அனுப்பிய மின்னஞ்சல்களைச் சுட்டிக்காட்டி பல ஊடகங்கள் எழுதியுள்ள நிலையில் .உதாரணமாக  2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி சாமியாரிடமிருந்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஒரு இ மெயில் வருகிறது.


அதில், பேக்கை எல்லாம் ரெடியாக வெச்சிருங்க.. அடுத்த மாதம் ஷெஸில்ஸுக்கு போக ப்ளான் செய்திருக்கிறேன். என்னுடன் வர முடியுமானால் முயற்சி செய்யலாம். உங்களுக்கு தேவையானதை சேசு செய்வார். அப்புறம் நீச்சல் தெரிந்தால், அங்கே கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ரெஸ்ட் எடுக்கலாம் என்றெல்லாம் நீள்கிறது அந்த மெயில்       இன்னொரு மின்னஞ்சல் சித்ரா ராமகிருஷ்ணன் அழகைப் பற்றியது. 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியில் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதில் இன்னைக்கு நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க.. உங்கள் தோற்றத்தை இன்னும் கவர்ச்சியாகவும் மாத்தனும்னா உங்கள் தலைமுடியை பிளாட் செய்யலாம். அதுக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளனும். மார்ச் மாதத்தின் நடுவில் கொஞ்சம் ப்ரீயாக இருங்க எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி மெயிலில், மகர குண்டல பாடலை கேட்டீங்களா? உங்கள் முகம் மற்றும் இதயத்திலிருந்து வரும் மகிழ்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர குண்டலம் என்பது திருப்புகழில் உள்ளது. இது காம உணர்வுகளை பக்தியுடன் இணைக்கக் கூடிய பாடல். மகர குண்டல பாடல் பற்றி சாமியார் தெரிந்திருக்க முடியுமெனில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த மெயில் வெளிப்படுத்துகிறது. மேலும் உங்களுடன் நேற்றைய நேரத்தைச் செலவிட்டேன். நீங்கள் செய்த இந்தச் சின்ன விஷயங்கள் உங்களை ரொம்பவே இளமையாக, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்குமெனவும் விலாவரியாக அந்தரங்கம் குறித்து பேசுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆக மறைமுக சாமியார் பிடியில் சித்ரா ராமகிருஷ்ணன்  செபிக்கு இழப்பு யார் காரணம் என்பது. விசாரணை முடிவில் இன்னும் முழுமையாக வரும் அது வரை காத்திருக்கலாம்.ஆட்டுவித்த சாமியார் தான் ஆனந்த் சுப்ரமணியனா?  இந்த முறைகேட்டை தடுக்க தவறியதற்காக என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூபாய் .6 லட்சம் அபராதம்.

சித்ரா பதவியிலிருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்தும், ஆனந்த சுப்ரமணியன் குறித்தும் செபிக்கு புகார்கள் அளித்திருந்த போதும் குற்றச்சாட்டு தொடர்பாக செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது., சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் அவரது வீடு, அலுவலகம் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடந்தது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்

சித்ரா பதவியிலிருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகத்தையும் சித்ரா மூலம் கட்டுப்படுத்தி ஊழல் செய்தும், செய்ய வைத்துமிருக்கிறார் அந்த சாமியார். சித்ராவே சாமியார் மாதிரி ஒரு பினாமி பெயரில் இயங்கினாரா அல்லது சாமியார் சிபாரிசு செய்த ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியாரா என்று கேள்வியும் சந்தேகமும் தற்போது எழுப்பப்படுகிறது. அதுவும் நியாயம் தானே.

ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர் தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படவே . 2018 ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தை, செபிக்கு ஒரு கடிதம் அளித்திருக்கிறது.


அதில் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்ட ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியார் என்றும், அவரே சாமியார் பெயரில் சித்ராவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...