முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலி பெண் சாமியார் அண்ணபூரனி ஆன்ட்டியிள் சேவையும், புதிய சேலையும், மக்களின் தேவையும்

கடவுளும் மனிதனும் வேறு என் நினைப்பது வழிபாட்டில் துவக்க நிலை.                  கடவுளும் நானும் வேறாக இல்லை   ஒன்றே என்பதைப் புரிந்தால் அதுவே ஆத்ம நிலை.


இந்தப் புரிதல் நிகழ்ந்தவர்களை 'சுவாமி' எனக் கொண்டாடுவது தான் நமது பண்பு. உலக மரபு,    அப்படி நமது கண்ணால் கண்ட மகான்கள் புரவிப்பாளையம் கோடி சுவாமிகள், திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார்,  கணக்கன் பட்டி சித்தர் என நாம் கண்ட மகான்கள் மற்றும் செவி வழி அறிந்த

பகவான் ரமண மஹரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், மற்றும் சித்பவாநந்தர், விவேகானந்தர் வள்ளலார், மணிவாசகர், நூற்றாண்டு கண்ட காஞ்சி மகா சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் ஆகியோர் நமது மரியாதைக்குரிய சமய சமூக  முன்னோடிகள். இந்த உயர்நிலையை அடையவோ, அல்லது  தொடக்கூட முடியாத ஞானக் குட்டைகள்,     




ஊழலில் ஊறிப்போன ஊச மட்டைகள்,  எந்த உழைப்புமின்றி வசதி, மரியாதை, சுகபோகங்களை அடைய தற்போது தங்களது மோசமான பிண்ணனி கொண்ட பழைய வாழ்க்கையை மறைத்து நாடகம் மற்றும் கூத்துகளில்  சாமியார்களாக வேஷம் போடுவது போல்  போட்டு வருகின்றனர் சிறிதும் வெக்கமோ, அல்லது கூச்ச நாச்சமின்றி 


இன்னொரு பக்கம்  ஜோதிடர், அருள்வாக்கு, தாயத்து, தகடு, மந்திரம், ஏவல், பில்லி சூனியம், தனவசியம், ஆவியுலகத் தொடர்பு என இந்த பகல் வேஷ பாவிகள் தொல்லை பல என்று பல தலைகளுடன் பளபளப்பாகப் பவனி வரும் பிரேமாநந்தா துவங்கி இன்று வரை இந்த இராவணச் சாமியார்கள் தொல்லைகள். மெலிந்து நலிந்த ஜனங்களாகிய ஜானகிகள் விழுந்து விழுந்து இவர்களை வணங்கும் விபரீதம்...! தன்னம்பிக்கையின் தலையில் இடி விழச் செய்து, முதுகெலும்பை முனை முறித்துப்போட்டு, மூச்சு விடுவதானாலும் (ஆ)சாமியைக் கேட்டுத்தான் விடவேண்டும் என்று பயந்த பக்தர்களைப் பயமுறுத்தி வைத்திருக்கிற பயங்கரம். நடக்கிறது.


தமிழ்நாட்டில் போலிச் சாமியார் எனும் திரைப்படம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்ததில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.  அப்போதே மக்களில் அடித்தள மற்றும் நடுத்தர வர்க்கம் இந்த போலியான சாமியார்களிடம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் தான் இருந்து வருகிறது, ஆனால் எந்தப் போலி சாமியார் புதிதாக உருவானாலும் அதை முதலில் உயர் வகுப்பு மக்கள் தான் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை உள்ளது.   





அதற்குக் காரணம் பல அதனால் தான் வட மாநிலங்களில் போலியான சாமியார்கள் அதிகம்  குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா, ஓம் பாபா, சச்சிதானந்த கிரி, நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், ராம்பால் உள்பட 14 பேர் போலி சாமியர்கள் என பெயர்கள் அடையாளப் படுத்தப்படுகின்றனர். மேலும் அந்த நிலை தற்போது தமிழகத்திலும் வந்துள்ளது.  கடந்த மாதம் ஈசலாகப் புறப்பட்ட  போலி பெண் சாமியார் அன்னபூரணி  ஆன்ட்டிக்கு பல தடவை  கல்யாணம் ஆகி பல தடவை டைவர்ஸ் ஆகியிருக்காம் ,கடைசியாக அன்னபூரணி கல்யாணம் பண்ணது வட தமிழகத்துல மிகவும் செல்வாக்கான 24 மனை தெலுங்கு செட்டியாரான முதியவர் ஒருவர், அந்தச் செட்டியாரிடம் ஆட்டைய போட்ட காச வெச்சி இப்போ  ஆட்டம் போடுது அந்த ஆன்ட்டி சாமியார் .     





 அன்னபூரணி ஆன்ட்டியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தாயின். கடைசிப், பெண். இவரது எதிர் வீட்டு கணவர் பெயர் சங்கரநாராயணன். ஆனால் அவருக்கு இவர் இரண்டாவது மனைவியாம். சங்கரநாராயணனின் வேலைக்காக சென்னைக்கு மாறி குடும்பம் வந்த நிலையில், குடியிருந்த பகுதியில் அன்னபூரணிக்கு சகஜமாக சில ஆண் நண்பர்கள் உருவாகினர். இதனால் அந்த வீட்டுப் பெண்கள் புகார் கிளப்பினராம்  இவர்களின் எதிர்வீட்டுக்கு இண்டீரியர் டெக்கரேட்டர் வேலை பார்க்க வந்தவர் தான்  ஏற்கனவே திருமணம் ஆன அரசு. அவரோடு பழகி, நெருக்கமாகி பின் ஓவர் நெருக்கமாகியிருக்கின்றனர்  பிரச்சனையாகி  இருக்கிறது. அதுவே நடிகை லட்சுமி இராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் பொய் கட்டப் பஞ்சாயத்துக்கு 

அரசுவும், அன்னபூரணியும் வந்த நிலையில் தனிமையிலிருந்த வீடியோ ஒன்று இரண்டு வீடுகளுக்கும் அனுப்ப்பட்டதாம். அதை எடுத்தது யார் ? என்பதே பலரது நெடுநாளைய கேள்வி. உறவினர்களின் பஞ்சாயத்துக்குப் பின் இருவரும் பிரிந்துவிட்டனர். அது அரசுவுக்கு  வசதியாகிப் போனதால் அன்னபூரணியை சென்னையிலுள்ள பட்டாபிராம் பகுதியில் தங்க வைத்திருக்கிறார்.  அங்கே சில பிரச்னைகள் உருவாகின அன்னபூரணியால். அதன் பின் திருமுல்லைவாயல், என்று இவர்களின் பயணம் சென்னை சிட்டிக்குள் பல இடங்களுக்கு நகர்ந்திருக்கிறது. தன்னிடம் பேசுபவர்களை எளிதாக ஈர்க்கக் கூடிய பேச்சுத் திறமை, வல்லமை இது சிவகாசி காக்கிவாடம்பட்டி ஜெயலட்சுமி போல  அன்னபூரணியின் தனித்திறமை. இதைத்தான் வகையாகப் பயன்படுத்தியுள்ளார் அரசு. அதற்காக





‘இயற்கை ஒளி’ எனும் அறக்கட்டளையைத் துவக்கி, அதன் மூலம் ஆன்மிகப் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன், மன ஆறுதல் அளிக்கிறேன், குறைகளை தீர்க்கிறேன்! என்று சொல்லி வகையாக கல்லாக் கட்ட துவங்கியிருக்கின்றனர்.  அதன் பின் அரசுவே அவரை பங்காரு சாமியார் மகன் செந்தில்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். 



அதன் பின் அந்த வட்டாரத்தில் முக்கிய முகமானார் அன்னபூரணி. அந்த வகையில் செந்தில் கிழித்த கோடுகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்.  அங்கே பிரச்னையானதும் அன்னபூரணியை கேர் டேக் பண்ணியவர் தான் ரோகித். இவர், பூரணியின் புகழ் பாடும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் அப்லோடு செய்து பல பாவ புண்ணியங்களை வாங்கிக் கட்டிக் கொண்டவர். என இப்படியாக நீள்கிறது இந்த திடீர் ‘அன்னபூரணி ஆன்ட்டியின்’ அசர வைக்கும் அப்டேட்ஸ். தற்போது ஆன்ட்டிக்கு துணை கொங்கு பெல்ட் முக்கியஸ்தர்கள்.!முன்னாள் அமைச்சர் ஒருவரே ஆன்ட்டிக்கு சில பல காலம் சத்தியமங்கலம் அவினாசி அன்னூர் கோபிசெட்டிபாளையம்னு பல இடங்களில் மாற்றம் ஆனநிலை அன்னபூரணி கடந்த ஒரு வருஷமா ஒரு கார்ப்பரேட் சாமியார்  மையத்துல தங்கியிருந்து பல போதை வஸ்து ஆகியவனைகளை கலந்து ஏஸி வென்ட் மூலமாக காற்றிலும் உடலில் தடவும் பசையாகவும் தயாரிப்பு செயல்படுத்துதல்னு ஒரு R & D டீமையே வெச்சி வேலை பார்த்து ஒரு வகை ஹைப்ரீட் போதை வஸ்துவை உருவாக்கித் தான் இந்த நிலையில் வந்ததாகவும் பரவலாக மக்கள் பேசும் நிலையில் அதை அப்பாவிகளின் மீது பயன்படுத்தி அவர்களை அடிமையாக்கி தனது காய்களை நகர்த்துகிறார் இந்த போலி அன்னபூரணி ஆன்ட்டி.என அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்த பலர் கூறிவரும் நிலையில்

 ஒரு வேளை அன்னபூரணி ஆன்ட்டி க்ளிக் ஆக்கினால், க்ளிக் ஆகும் அறிகுறி தென்பட்டாலும் கூட அரசியலுக்கான சகுனி திரைப்பட ஜெயமே லயம் போல அன்னபூரணி ஆன்ட்டியை காட்டி 2 சதம் ஓட்டுக்களையாவது 2024 ல் ஒரு கட்சி பெறும் திட்டம் தான் என் அரசியல் அறிந்த பலர் பகிரங்கமாகப் பேசிவரும் நிலையில்..ஆன்ட்டி அன்னபூரணி புது ப்ராஜெக்ட்.. சாமியார் வேடத்தில்  சென்னையில் ஜாகையானவர் கடைசியில அன்னபூரணி ஆன்ட்டியை அ........ பாடும் க்ரூப்பாகவே மாறியது தனிக் கதை அந்த ஆன்ட்டி அணிந்து வரும் விதவிதமான சேலை தான் இப்போது டாபிக் தினசரி ஒரு விலை உயர்ந்த புதுப் புடவை பற்றிய பேச்சு தான் பெண்கள் மத்தியில்  மேலும் அவருடன் இருந்த அரசு நிலை குறித்து கேள்வி வருகிறது, எப்படி இறந்தார் என்று இதுவரை விபரமில்லை.  இவர் போலவே  ராதே மா. இவரது இயற்பெயர் சுக்வீந்தர் கவுர். இவர் பஞ்சாப்பில் பிறந்தவர். இவர் தன்னை காளியின் அவதாரமாகவே கூறி வருகிறார். இவருக்கு பாலிவுட் மற்றும் சின்னதிரை நடிகர், நடிகைகள் எல்லாம் பக்தர்கள் எனக் கூறப்படுகிறது. டெல்லி காவல் நிலையத்தில் தன்னை சாமியார் என கூறிக் கொண்ட ராதே மாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அவுரங்காபாத்திலிருந்து மும்பை சென்ற போது விமானத்தில் திரிசூலத்துடன் சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டு சர்ச்சையில் சிக்கினார். மேலும் பிக்பாஸ் இந்தி 14 ஆவது சீசனில் கலந்து கொண்ட போது சக போட்டியாளரால் பாலியல் புகாருக்குள்ளாக்கப்பட்டார். இத்தனை சர்ச்சைகளுடன் வலம் வரும் ராதே மா எப்போதும் சிவப்பு நிற சேலையில்  உலா வருகிறார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் மா ஆதி சக்தி என்பவர் பிரபலம். கொரோனா ஊரடங்கின் போது ஆன்மிக சொற்பொழிவாற்றினார். கொரோனா ஊரடங்கால் இந்த கூட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல்துறை  தெரிவித்தனால் ஆத்திரமடைந்தவர் கையில் வாளுடன் காவல்துறையினருடன் சண்டையிட்டார். இந்தக் காணொளி வெளிவந்துள்ளன.  அன்னபூரணி ஆன்ட்டியைக் கூட காலில் விழுந்து வணங்கும் நபர்களை நினைத்தால் ஐயோ பாவம். தன் இயல்பு முடியாமை‌.  பாவம் எதைத் தின்றால் தங்கள் பித்தம் தீரும் எனும் மக்கள் நிலை  சமூக வலை தள தொழில் நுட்பத்தாலும், அதை சாமனிய மக்கள் கையாளும் வாய்ப்புகளும் இன்று அன்னபூரனி ஆன்ட்டியை எளிதாக அம்பலபடுத்தக் காரணமாயிற்று. அதே போல  ஹரித்துவார் பேசிய வன்பேச்சுகளை பெரிய ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் மறைத்தாலும், சாமானிய மக்கள் சமூக வலைத் தளங்களில் அம்பலப்படுத்தி விவாதப் பொருளாக்கி இன்று நீதிமன்றத்தின் கவனத்தை பெற வைக்க முடிந்துள்ளது. அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எழுதிய முப்பால் நூலில் போலிச் சாமியார்கள் குறித்து தனியாக, ‘கூடா ஒழுக்கம்’என ஒரு அதிகாரம் எழுத வேண்டியதாயிற்று.

”பிறரை நம்ப வைத்து வஞ்சிக்கின்ற – பிறர் துன்பத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிற – போலி ஆன்மீகவாதிகளுக்கு ஈடாக வேறு தீயவர் இல்லை” என்கிறார் திருவள்ளுவர்.

மறுபடியும் உறுதிபடச் சொல்கிறேன், எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள், சமரசமற்ற நீதியை நிலை நாட்ட விரும்பும் நேர்மையான ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தால் போலிச் சாமியார்களை மக்கள் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்து விடும். அப்படியே சிலர் இருந்தாலும் அவர்களின் கொட்டத்தைக் கட்டுப் படுத்திவிடலாம். இல்லாவிட்டால் ஆட்சியாளர்களே போலிச் சாமியார்களுடன் கூட்டணி கண்டு மேன்மேலும் மக்கள் ஏமாறக் காரணமாகலாம்! இது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது!

கள்ளக் காதல் செய்து அடுத்தவர் குடியைக் கெடுத்த பெண்மணியான அன்னபூரணி ஆன்ட்டி சாமியாருக்கும், இரத்தப்பலி கேட்கும் சாமியார்களுக்கும் பக்தர்கள் கிடைப்பது எப்படி? இது போன்ற சாமியார்களுக்கும், இன்றைய அரசியல் சூழலுக்குமான தொடர்புகள் என்ன..?

மக்களில் பெரும்பாலோரின் வாழ்க்கை துன்பகரமானதாகவே உள்ளது! அந்தத் துன்பத்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயிற்சியும், பக்குவமும் அடையாதவர்கள் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்த்து ஏங்கிய வண்ணம் வாழ்கிறார்கள். அந்த துன்பத்திற்கான ஆறுதல் அல்லது தீர்வு எங்கோ, யாரிடமோ தமக்கு கிடைக்கும் என்ற அவர்களின் தேடுதலில் கண்டு அடையப் படுபவர்களே இப்படிப்பட்ட போலிச் சாமியார்கள்! அந்தச் சாமியாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றோ, குறைந்தபட்சம் இவர் யோக்கியமானவர் தானா என்று கூட அந்த நேரம் அவர்கள் மனம் சிந்திக்காது! ஒரு குறிப்பிட்ட சாமியாரின் தோற்றமோ அல்லது சூழலோ பிடித்துப் போய்விட்டால், மக்கள் அவரைச் சரணடைந்து விடுகின்றனர். பெரும்பாலோர் அந்தச் சாமியார் தனக்கெனவே இறைவனால் அனுப்பட்டவர் என நினைக்கத் தளைப்பட்டு விடுகின்றனர்.

பொருளாதாரப் பிரச்சினை தான் இன்று மிகப் பலரையும் வாட்டுவது, அத்துடன் அன்பு கிடைக்காத ஏக்கம், சுயநலமிக்க சமுதாயத்தால் அடைந்த நிராதரவு நிலை இவை எல்லாமே ஒரு சாமியாரிடம் மனிதனைக் கொண்டு சேர்க்கும் காரணிகளில் முக்கியமானவை. மற்றொரு முக்கிய காரணம், தீராத நோய் அல்லது உடல் உபாதைகள் கடவுளின் அருளால் தீருமென்று நம்பியும் தீராதவை சாமியார் மூலமாகவாவது தீர்த்து வைக்கப்பட வாய்ப்புள்ளது என அவர்கள் நம்புகிறார்கள்.

தற்போது அன்னபூரணி ஆன்ட்டி சாமியாரினியின் கடந்த கால கள்ளக் காதல் விஷயங்கள் பொது வெளிக்கு வந்த நிலையில், காவல்துறையினர் அவரை கொரானாவை மீறி கூட்டம் நடத்தினார், மீண்டும் புத்தாண்டில் திருமண மண்டபத்தில் நடத்த உள்ளார்  என்ற வகையில் சிறைப்படுத்த முயன்ற நிலையில், தலைமறைவாகிவிட்டார்!  ஆனால் தற்போது காஞ்சிபுரத்தில் தரிசனம் தர வர உள்ளதாக தகவல்  மீண்டும் கூட அவர் தலைதூக்க வாய்ப்பு உள்ளது.


ஆரோக்கியமான குடும்பச் சூழல், அன்பு செய்யும் உறவுகள், நம்பிக்கையான சுற்றம், பகுத்தறியும் அறிவுத் திறன் ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறைகளே போலிச் சாமியார்களுக்கு வாய்ப்பாகின்றன என்பது ஒருபுறம் உண்மை என்றாலும், ஆட்சி நிர்வாகத் தலைமையின் அலட்சியமும்,போதாமைகளும் போலிச் சாமியார்கள் காட்டில் மழை பெய்யக் காரணமாகிறது.

போலி சாமியார்களைப் போலவே இன்று மக்கள் நலன்களை காக்கவே ஆட்சி செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி பொதுச் சொத்தை சூறையாடும் சில ஊழல் மலிந்த அரசியல்வாதிகளுக்கு போலிச்சாமியார்களை கைது செய்து சிறையில் தள்ளும் அறச் சீற்றம் கொள்ள வாய்ப்பில்லை. மாறாக அவர்கள் அந்த போலிச் சாமியார்களின் பின்னுள்ள பக்த கோடிகளின் ஓட்டுகளை மட்டுமே கணக்கில் கொள்கிறார்கள். உண்மையில் அந்த போலிச் சாமியார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வேறு யாரைவிடவும் அவரை நம்பி ஏமாறும் பக்தர்களுக்கே அதிக நன்மை தருவதாகும். ஆனால், அந்த துணிச்சல் இன்று எந்த ஆட்சியாளருக்கும். இல்லாத சூழல் தான் போலிசாமியார்கள் ஊருக்கு ஊர் பெருகுவதற்கு காரணமாகிறது.

ஒருவகையில் போலிச் சாமியார்களைப் போலவே அரசியல்வாதிகளும் போலி வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்களே. மக்களின் அறியாமையும், துணிச்சலின்மையும், அதிகாரத்திற்கு அடி பணியும் மனோபாவங்களுமே அரசியல்வாதிகள் தலைத்தோங்க உரங்களாகின்றன! இந்த மூன்றையும் மக்களிடம் நிலை நிறுத்தி பயிற்றுவிக்கும் சாமியார்கள் அரசியல்வாதிகளுக்கு மறைமுகமாக நன்மை செய்தவர்களாகின்றனர். அதனால் தான் ரிக்வைடா தீர்வைக் காட்டி  இல்லாத நாடான கைலாசா என அவர் விடும் டூப் அவருக்கு கிரிப்டோ கரண்சி உதவுகிறது. நித்தியானந்தா போன்றவர்களை பிடிக்காமல் தப்பவிட்டது    யார் என்பதை சிந்திக்க வேண்டும்.

மனித குலம் தோன்றியதில் இருந்து போலி சாமியார்கள் தோன்றியவண்ணமே உள்ளனர். அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் போலிச் சாமியார் குறித்து தனியாக, ‘கூடா ஒழுக்கம்’ ஒரு அதிகாரம் எழுத வேண்டியதாயிற்று.

”பிறரை நம்ப வைத்து வஞ்சிக்கின்ற – பிறர் துன்பத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிற – போலி ஆன்மீகவாதிகளுக்கு ஈடாக வேறு தீயவர் இல்லை”

மறுபடியும் உறுதிபடச் சொல்கிறேன், எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள், சமரசமற்ற நீதியை நிலை நாட்ட விரும்பும் நேர்மையான ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தால் போலிச் சாமியார்களை மக்கள் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்துவிடும். அப்படியே சிலர் இருந்தாலும் அவர்களின் கொட்டத்தை கட்டுப் படுத்திவிடலாம்.

இதில்  அரசியல்வாதி, பகுத்தறிவு அரசியல்வாதி என்ற பாகுபாடெல்லாம் இல்லை. மதவாத சாமியார்களை பாஜக தன் அரசியலுக்கு பயன்படுத்துகிறது என்றால், மேல்மருவத்தூர் சாமியார், கிறிஸ்த்துவ பிரச்சாரகர் தினகரன் போன்ற துறவுக்கே சம்பந்தமில்லாத பகல் கொள்ளைக்காரர்களை பல அரசியல் காரர்கள் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் சிவயோகி சிவகுமார் என்ற போலிச் சாமியார்- பெண்களை தவறாக கையாள்பவர் – தற்போது திமுக  முதல்வராவதற்கு தான் தான் காரணம் என சொல்லித் திரிகிறார்.                                  "தோல் காவி சீரைத்துணிகீழ் விழவுடுத்தல் கோல்காக் கரகம் குடை செருப்பு — வேலொடு  பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய் நல்லவரால் நாட்டப்படும்.     


               

ஆவரணமின்றி  அடுவாளும் ஆனை தேர் மாவரணமின்றி மலைவானும் — தாவில் கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப் பழுதாகும் பாசண்டியார்க்கு"                  கழுதை மேல் உட்கார்ந்தவன் தலை மேல் மூட்டை! கதை தான் இந்த போலிச் சாமியார்களை நம்பிய மக்கள் நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த