மதுரை மாவட்டம் மேலூர் அருகில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததா ?
உண்மை நிலை என்ன? விஷமருந்திய மைனர் பெண், மரணம் நடக்கும் முன் பின்னணித் தகவல் :- சிகிச்சை பலனின்றிப் பலியான சிறுமி சிக்கிய உள்ளூர் இளைஞர் உள்ளிட்ட 8 நபர்கள் கைது
மேலூர் வட்டம் தும்பைப்பட்டி கிராமத்தில் 17 வயது மைனரான முக்குலத்தோர் சமூகத்தின் சிறுமியை உள்ளூர் இஸ்லாமிய இளைஞர் விரும்பிய நிலையில் அந்தப் இளைஞரைத் தேடி ஈரோடு சென்ற பெண் விஷமருந்தி உயிரிழந்த விவகாரம் உடந்தையாக இருந்தவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில தற்கொலைக்கு முயன்ற மைனர் சிறுமி பலியான தகவல் வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது. இந்த நிலையில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு குறித்த ஒரு பார்வை.
மேலூர் காவல் நிலைய சரக எல்கைக்கு உட்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி சபரி.
இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். 17 வயதான மைனர் மகள் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிற நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி மகள் மாயமாகியதையடுத்து மேலூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி சிறுமியின் தாய் சபரி என்பவர் புகார் கொடுத்து அதற்கு வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் வழக்குப் பதிவு செய்தால் தன்னுடைய மகளின் விவரம் பத்திரிக்கைகளில் செய்தியாக வந்துவிடும் எனக் கருதி மனு ரசீது மட்டும் பதிவு செய்யக் கேட்டுக்கொண்டார் அதன்படி இப் புகார் சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் மனு ரசிது GSR கொடுக்கப்பட்டு புகார் விசாரணையிலிருந்தது.
பின்னர் மேலூர் காவல் நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் மனுதாரர் வழக்கு பதிவு செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் மைனர் சிறுமியைக் காணவில்லை என்று பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது விசாரணையிலிருந்த நிலையில் காவல் நிலையக் குற்ற எண் 88/2022 எனப் பதிவானது
காணாமல் போன சிறுமி அதே கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா என்பவருடன் விரும்பிய நிலையில் பழகியதாகவும் அவருடன் சென்றிருக்கலாம் என்றும் தெரியவந்த நிலையில். பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அந்த மைனர் பெண் மாயமாகியுள்ள நிலையில் மார்ச் 3 ஆம் தேதி காலை தும்பைப்பட்டியைச் சேர்ந்த நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் என்பவர் காணாமல் போன சிறுமியை மயக்க நிலையில் அவருடைய தாயார் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார்.
உடனே சிறுமியின் தாயார் சபரி தன்னுடைய மகளை மேலூர் தனியார் மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அங்கு மருத்துவரின் ஆலோசனை பேரில் அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதையடுத்து மேலூர் காவல் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் மைனர் சிறுமியின் தாய் கொடுத்த புகார் விசாரணை நிலுவையிலிருந்து வந்தது. ஊர் மக்கள் ஒரு புறம் நெருக்கடி தர, காவல்துறை மறுபக்கம் நெருக்கடி தர நாகூர் ஹனிபாவின் தாயார் சிறுமியை அழைத்து வந்தது குறித்து தன் மகனுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் இருவரையும் ஏற்கவும் மதம் இனம் காரணமாக மற்றும் உள்ளூர் என்பதாலும் பயம் காரணமாக மறுத்துள்ளார். அதன் பிறகு மேற்படி நாகூர் ஹனிபா 3 எலி பேஸ்ட்களை வாங்கி வந்து சிறுமியும் நாகூர் ஹனிபாவும் தற்கொலை செய்து கொள்ளலாம் என இருவரும் எலி பேஸ்ட் விஷம் உட்கொணடுள்ளனர் .
ஆனால் நாகூர் ஹனிபா அதை முழுமையாகச் சாப்பிடாமல் வெளியில் துப்பியுள்ளார். ஆனால் அந்த மைனர் சிறுமி சிறிதளவு எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் . பின்னர் அச்சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதைச் சொல்லாமல் சிகிச்சை பெற்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது அவருக்கு கையில் டிரிப் ஏற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு உடல்நிலை மேலும் சரியில்லாமல் போகவே ஈரோட்டிலிருந்து நாகூர் ஹனிபா அந்தச் சிறுமியை தும்பைப்பட்டி அழைத்து வந்து தன்னுடைய தாயார் மதினாவிடம் 2.3.2022 ஆம் தேதி இரவு சிறுமியின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் காலையில் நாகூர் ஹனிபா தாயார் மதினா பேகம் சிறுமியின் தாயார் சபரியிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது சிறுமி எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் என்ற விவரம் தெரிந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும் மருத்துவ அதிகாரிகளின் அறிக்கையில் மேற்படி சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகப் படவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் காவல்துறையினர் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்று ஈரோடு பள்ளிபாளையத்தில் தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், ராஜாமுகமது மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை பல்லடத்தில் வைத்தும் கைது செய்து மேலூர் கொண்டு வந்துள்ளனர்.
அதேபோல் நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், தாய்மாமாவின் மனைவி ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள் மற்றும் அவரது உறவினர் ராஜாமுகமது ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் உள்ள 10 குற்றவாளிகளில் 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இவ் வழக்கில் எதிரிக்கு உதவிய 2 நபர்களைக் கைது செய்ய தனிப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நாகூர் ஹனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வழக்கின் சட்டப்பிரிவுகள் போக்சோ சட்டத்தின்படி மாற்றப்பட்டுள்ளது.
நாகூர் கனி (வயது 29) சுல்தான் (வயது 50 ) அப்பாஸ் (வயது 45) சாகுல் (வயது 32) இரம்ஜான் (வயது 25) மதீனா (வயது 50) ரகுமான் (வயது 35) தற்போதைய நிலையில் உள்ள தகவலாகும் நாம் தும்பைப்பட்டி சார்ந்த சமூகத்தின் அந்தஸ்து உள்ள பலர் மூலம் சேகரிப்பு செய்த உண்மை நிலவரம் இதுவே. இதுகுறித்து பாஜக வின் முன்னணி பிரமுகர் எச் ராஜா கண்டனம் தெரிவித்து உள்ளார் அதில்
மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22 ல் புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் . இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலைப் பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால் இது மைனர் பெண் விவகாரத்தில் அந்த இஸ்லாமிய இளைஞர் செய்த குற்றம்
அவர் மைனர் அல்லாத மேஜர் என்றால் இது இவ்வளவு பெரிய விவகாரத்தில் வந்திருக்காது என்பதே உண்மை. தனக்கு திருமணம் பேசுவது அறிந்த அந்த மைனர் பெண் தன் காதலனை தேடி ஈரோடு சென்ற தகவல் தான் நாம் விசாரணை செய்த நிலையில் பலர் கூறிய நிகழ்வு.பாஜக அரசியல் காரணங்களுக்காக அந்த ஊர் முக்குலத்தோர் மக்கள் உண்மை நிலை தெரிய வந்ததன் பின்னர் ஒத்துழைப்பு இல்லை என்பதால் எச். இராஜா கூற்று எடுபடவில்லை என்பது தெரிகிறது. சிறுமியின் மரண வழக்கு போஸ்கோ சட்டத்தில் பதியப்பட்டிருக்கும் நிலையில் சட்டப் படி அந்தச் சிறுமியோட புகைப்படத்தையும் பெயரையும் பொதுத் தளத்தில் பதிய கூடாது. என்ற நிலையில் இருக்கும் போது பலர் புகைப்படங்கள் பதிவு செய்வது அவர்கள் அறியாமையா சட்டப்படி கூட வேணாம் குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையிலாவது இறந்த சிறுமியின் பெயரை புகைப்படத்தை பரப்புவதை நிறுத்துங்கள். இது கடந்த காலத்தில் நிர்பயா வழக்கில் பெயர் மாற்றம் செய்தே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பலரும் சட்ட விதி மீறல்கள் செய்வது குற்றம் எனத் தெரிந்தா அல்லது தெரியாமலா என்பது தான் எழு வினா ?
கருத்துகள்