முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயல்நாட்டு தொழிலாளிகளின் இக்கட்டான நேரங்களில் உதவும் வெள்ளை பாஸ்போர்ட்

மலேசியாவில் ஐந்து லட்சத்திற்கும் மேலான தமிழர்கள்  உணவகம் தங்கும் விடுதிகள் மற்றும் கார் சர்வீஸ் மற்றும் சுத்தம் செய்வதில் தான் பணிபுரிகிறார்கள் 


இது போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கடவுச்சீட்டு அல்லது பாஸ்போர்ட்டை  அந்த சிறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாங்கி வைத்துக்கொள்வது அங்கு வழக்கமான ஒன்று. ஆனால், வேலை பார்த்தது போதும் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை, மற்றும் சொந்த நாட்டிலுள்ள ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும் போது இந்த நிறுவன உரிமையாளர்கள் அவர்களது பாஸ்போர்ட்டைத் தர மறுக்கிறார்கள் இதுவும் இங்கு வழக்கமான ஒன்றாகவே தான் பார்க்கப்படுகிறது. இது போன்ற தொழிலாளிகளின் இக்கட்டான நேரங்களிள் தங்களுடைய பாஸ்போர்ட் எண் (Paasport pin number)  தெரிந்தாலே போதும் அவர்கள் வெள்ளை பாஸ்போர்ட் எடுத்துவிடலாம் (White pasport)



இதனை 8 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் அதனைக்கொண்டு மலேசிய உள்ளிட்ட அயல் நாட்டு  அரசாங்கத்திடம்   அபதாரம் கட்டி அவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியாகலாம், இது தற்போது மிகக் குறைந்த விலையில் இந்தியத் தூதரகம் நடைமுறப்படுத்தியுள்ளதனால் தனியார் ஏஜனட்டுகளிடம் 2000 ரிங்கிட் (வெள்ளி) அவசர அவசரமாக 5000 மலேசியா ரிங்கிட் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிக.


இந்த வெள்ளை பாஸ்போர்ட்டின் உன்மை விலை வெறும் Rm 77  அதாவது (77 Ringit) தான்


விவரங்களுக்கு மலேஷியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் (INDIAN EMBAASY) அலுலகத்தில் தெரிந்துகொள்ளலாம் இல்லையெனில் புத்ர ஜெயாவில் PUTRA JAYA அமைந்துள்ள மலேசிய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் 

பல வருடங்களாக சொந்த நாட்டிலுள்ள ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும்  தமிழர்களுக்கு சாதாரண பாஸ்போர்ட் (அடர் நீல அட்டை) விடுமுறை, சுற்றுலா, படிப்பு மற்றும் வணிகப் பயணங்கள் (36 அல்லது 60 பக்கங்கள்) போன்ற தனிப்பட்ட பயணங்களுக்காக சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு "வகை P" பாஸ்போர்ட் ஆகும், இதில் P என்பது தனிப்பட்டது .

 உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு (வெள்ளை அட்டை)  வெளிநாட்டில் நிலைகொண்டுள்ள இந்திய ஆயுதப்படை உறுப்பினர்கள் உட்பட, உத்தியோகபூர்வ வணிகத்தில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது . இது "வகை S" பாஸ்போர்ட், S என்பது சேவையைக் குறிக்கிறது .  2021 ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்ட அனைத்து அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டுகளும் e-Passports ஆகும், ஆவணத்தில் தரவு சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது.



 இராஜதந்திர பாஸ்போர்ட் (மெரூன் கவர்) இந்தியத் தூதர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் , சில உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக கூரியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. கோரிக்கையின் பேரில், உத்தியோகப் பூர்வ வணிகத்தில் பயணிக்கும் உயர்நிலை மாநில அளவிலான அதிகாரிகளுக்கும் இது வழங்கப்படலாம். இது ஒரு "டைப் டி" பாஸ்போர்ட், டி என்பது டிப்ளமேட்டிக் என்பதைக் குறிக்கிறது . 2008 ஆம் ஆண்டு முதல், அனைத்துத் தூதரக கடவுச்சீட்டுகளும்.             e-Passports ஆகும், ஆவணத்தில் தரவு சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்திய குடிமக்களுக்குப் பயன்படுத்தப்படும் பல விசா தேவைகள் தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகின்றன.

கூடுதலாக, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழக்கமான இந்தியா-வங்காளதேச பாஸ்போர்ட் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா-இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை வழங்குவதற்கு இந்தியாவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ராட்கிளிஃப் கோட்டின் மறுபுறத்தில் மூதாதையர் வீடுகள் இருக்கும் இந்திய குடிமக்களுக்கான இந்தியா-பாகிஸ்தான் பாஸ்போர்ட் . இந்த மூன்று கடவுச்சீட்டுகளும் முறையே பங்களாதேஷ் , இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டன மட்டுமே மற்ற வெளிநாடுகளுக்கு பயணம் செல்லுவதற்குச் செல்லாது. 2013  ஆம் ஆண்டில் இந்தியா - வங்காளதேசக் கடவுச்சீட்டை வழங்குவதை இந்தியா நிறுத்தியது. குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...