முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருக்கடவூர் அபிராமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகப் பெருவிழா


 "மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்


அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே

மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே

பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்

கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,

மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்


துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்

வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்

சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே." ...அபிராமி அந்தாதி பக்தி இலக்கியத்தில் முக்கியமான பதிகமிது.

'அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் .....   அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்....... எவரெவர்க்குதவினர் எவரெவர்க்குதவிலர்...... தவரவர் நினைவது தமையுணர் வதுவே.

திருக்கடவூர் அபிராமி ஆலயத்தில் கும்பாபிஷேகப் பெருவிழாவில்_இன்று  தருமையாதீனம் இயற்கையான காலத்தை உருவாக்கி வைத்தவனே ஆண்டவனாகக் காட்சி தருகிறான். மனித உடம்பு என்கின்ற உருவத்தைப் படைத்தான்.


சில புண்ணியர்களுக்கு மட்டும் மகான் என்ற மகா உருவத்தையும் படைத்து அவர்கள் மகத்தான பல சாதனைகளைச் செய்ய இந்த மகான்களுக்கு சக்தியையும் கொடுத்தான்.

திருக்கடவூரில் இன்று பல லட்சம் அடியார்களுடன் குருமகா சந்நிதானத்துடன் பிற ஆதீனங்கள் கலந்து கொண்ட நிகழ்வு. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்  சமயக் குரவோர் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் சோழநாட்டின் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த ஸ்தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்மையான நம்பிக்கை இத் திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை -தரங்கம்பாடி செல்லும் சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ. தொலைவில்  திருக்கடையூர் உள்ளது. சீர்காழியிலிருந்து 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் செல்லும் சாலையில்  உள்ளது. இங்குள்ள  ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் அருள் தருகின்றனர்.   இங்கு      அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலமாகும். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் 108 வதான ஸ்தலம், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன. மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். திருமணம் திருமாங்கல்யம் கொண்டு திருப்பூட்டுதல் திருமண வாழ்வில் முப்பதாண்டு நிறைவில் மறு முறை திருமணம் புதுப்பிக்கப்பட்ட தாலி அணிவித்து நடத்தும் விழா நிகழ்வுகள் இங்கு அதிகம் நடைபெறும். ஒரு ஆலயத்தில் குடமுழுக்கு எப்படி 12 ஆண்டு நிறைவில் நடக்கிறதோ, அதுபோலவே திருமணமும் அதன் நிகழ்வு இந்து சமூகத்தில் 30 ஆண்டு நிறைவில் நடத்தப்படும் நிகழ்வாக அமையும். அதைத்தான் அறுபதாம் கல்யாணம் அல்லது மணிவிழா என அழைப்பது வழக்கம். முழு அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக தஞ்சாவூர் ஆண்ட மராட்டிய சரபோஜி மன்னரிடம்  வாய் தவறிச்சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடமிருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடியதில் அம்மன் அணிந்த நகை வானில் ஜொலிக்கும் படி நிகழ்வு  அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த ஸ்தலம்  இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.  அப்படிச் சிறப்பு வாய்ந்த   திருக்கடையூர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்



சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளின் தங்கக் கொடிமரம்

பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று அதி விமர்சையாக நடைபெற்றது

தருமபுரம் ஆதீனத்தின் நேரடி பராமரிப்பிலுள்ள திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா மார்ச் மாதம்  இருபத்தி மூன்றாம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு

எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன

இன்று அதிகாலை 8 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ண ஆகுதி மற்றும் மஹா தீபாராதனைகளும் செய்யப்பட்டது

தருமபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, பட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு   மடாதிபதிகள்,  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்

தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க  கும்பாபிஷேகத்திற்கான கடம் புறப்பாடு நடைபெற்றது

யாகசாலையிலிருந்து ஊர்வலமாகப் புனிதநீர் எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதியின் தங்கக் கொடிமரம், அம்பாள் சன்னதியின் தங்க கொடிமரம், மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து சுவாமி அம்பாள் காலசம்ஹாரமூர்த்தி வில்வவனநாதர் முருகன் விநாயகர் ஆகிய சன்னதிகளின் கருவறை விமானங்கள், ஐந்து நிலை ராஜ கோபுரங்கள் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது

அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் சரக காவல்துறை டிஐஜி கயல்விழி மேற்பார்வையில், 3 மாவட்டக் காவல்துறைக்  கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 1200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்

கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46 ஆவது குருமகாசந்நிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

தொண்டைமண்டல ஆதினம் 233வது திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,

செங்கோல் ஆதீனம்103வது குருமகா சன்னிதானம். மற்றும்  சென்னை பத்திரிகையாளர் மன்றம் நிர்வாகி விமலேஷ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு நடந்த விழாவில் சைவ ஆகமங்கள் முறையில் சிறப்பாக நடந்தது. 

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...