முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயமுத்தூர் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரூ.300 கோடி வரை மோசடி

கோயமுத்தூர் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரூ.300 கோடி வரை மோசடி செய்த புகார் எழுந்த நிலையில் அது குறித்து விசாரணை தீவிரமாகிறது. 


கோயமுத்தூர் விமல் குமார் , Mr. Money எனும் யூடியூப் சேனல்  நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்ததன் மூலம் அன்னியச் செலாவணி, பங்குச் சந்தை, க்ரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு கல்வியும், பயிற்சியும் வழங்குவதாக தெரிவித்த காரணமாக பண ஆசை கொண்ட உழைக்காமல் சம்பாதிக்க ஆசைப்பட்ட பலர் இவரது யூடியூப் சேனலை 1,53,000 பின் தொடர்ந்துள்ளனர்.

அதன் மூலம் Mr. Money மற்றும் Alphaforexmarket என்கிற இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய மக்களிடமிருந்து கடந்து சென்ற நான்கு ஆண்டுகளாக ரூ.300 கோடி வரை வாங்கி விட்டு உறுதியளித்த படி லாபத்தையும் முதலீட்டையும் மக்களுக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு முழுவதும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர்

கோயமுத்தூர் மாவட்டம் காளப்பட்டியில் இயங்கிய  விமலின் அலுவலகம் தற்போது மூடப்பட்டிருப்பதாகவும் கடந்த நான்கு மாதங்களாக அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றும் அவரால் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்க்வே விமல் குமாரும் அவருடைய மனைவி ராஜேஷ்வரியும் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்  புகார் செய்தார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்களை நேரில் சந்தித்தும் இணையம் மூலமாகவும் விமல் குமார் பணத்தை வசூல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்கு ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.


இண்ட்ரோ ப்ரோ எனப்படும் அறிமுக புரோக்கர்களை நியமித்து மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை அந்த நபர்களுக்கு மகாநதி திரைப்படக் கதையில் வருவது போல் ஊதியம் விமல் கொடுத்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என ஆர்வத்துடன் பணியாற்றியவர்கள் மாநிலம் முழுவதும் சுமார் 300 பேரை திரட்டி ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கி  செலுத்தியுள்ளனர். அதிகமான பணம் கைக்கு கிடைத்ததை அடுத்து வேலையில் அமர்த்தியவர்களுக்கு சம்பளம் வழங்காத மிஸ்டர்.மணி எனப்படும் டுபாக்கூர் நிறுவனம் நடத்திய  விமல் குமார், முதலீட்டாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் நீண்ட காலம் கடத்தி  இழுத்தடித்து வந்ததையடுத்து ஊழியர்களும் பாதிக்கப்பட்டோரும் மிஸ்டர் மணி எனும் விமல் குமாரையும் அவரது மனைவியையும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாததையடுத்து தங்களிடம் பணம் பெற்ற நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்ததால் கோபமடைந்த, மதுரை தூத்துக்குடி, கோயமுத்தூர் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் அவர்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததாக தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...