திருச்சிராப்பள்ளி டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனி நடராஜன். சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவரது மனைவி ஆதிலட்சுமி( வயது 56). சார்பு ஆய்வாளரானவர், நவல்பட்டிலுள்ள காவலர் நிரந்தரப் பயிற்சிப் பள்ளியில் பெண்கள் பயிற்சியாளராக பணிபுரிந்தார்.
தனது குடும்பத்தையும் இக்பால் காலனியிலிருந்து நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளி உதவி ஆய்வாளர்கள் குடியிருப்புக்கு மாற்றிய நிலையில் ஆதிலட்சுமி சனிக்கிழமை காலை அவரது வீட்டில் சேலையில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ள.
தகவலறிந்த நவல்பட்டு காவல்நிலையத்தினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சிராப்பள்ளி அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர். அவருக்கு லெனின்( வயது 26), பாரத்( வயது 22) என இரு மகன்கள் உள்ளனர்.
சனிக்கிழமை காலை ஆதிலட்சுமி அவரது அறையை விட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியில் நடராஜன் கதவை தட்டியுள்ளதாகவும். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும்.
அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டதைப்பார்த்தவர் உடனே நவல்பட்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய. முதற்கட்ட விசாரணையில், ஆதிலட்சுமி இரு வங்கிகளில் கடன் பெற்றிருந்ததும், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்ததாகவும். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆதிலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை முடிவில் தற்கொலைக்கான காரணம் தெரியலாம்.
கருத்துகள்