சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உள்ள மூன்று டவர் பிளாக்குகளுக்குப் பின்புறம் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள பல கட்டடங்கள் உள்ளன.
அதில் கல்லீரல் சிகிச்சைக்கான கட்டிடத்திலுள்ள மூன்று தளங்களின் தரைத்தளத்தில், நேற்று காலை வெடிச் சப்தம் கேட்டதன் பின்னர் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் வைக்குமறையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளிருப்பதாக முதல் தகவல் வெளியானது. கட்டடத்தில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு அருகில் அவசர சிகிச்சை பிரிவு வார்டிருப்பதால் உள்ளே சிக்கியுள்ள நோயாளிகளை வெளியே கொண்டுவருவதற்கான பணிகளில் நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதோடு, சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் கொண்டுவரப்பட்டன ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் நீடிக்க. தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை மேல் தளம் வரை சென்ற நிலையில். மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ மேலும் கொழுந்துவிட்டு எரியவே ,
கட்டடத்தினுள் சிக்கியுள்ள நோயாளிகள் 30-க்கும் மேற்பட்டவர்களைப் பத்திரமாக மீட்கப்பட்டதாக மருத்துவமனையின் சார்பில் தகவல்க தெரிவிக்கப்பட்டன. தீ விபத்து குறித்து தகவலறிந்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
சென்னை மேயர் பிரியா ராஜன், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர், காவல்துறை உயரதிகாரிகள் பலரும் விபத்து நடந்த இடத்துக்கு வந்தனர். 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு கொண்ட பணி செய்து தீயைக் கட்டுப்படுத்தியது மிகவும் கடினமான பணியாகவே இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்திய பின்னர் தான் இந்த விபத்துக்கான காரணம் தெரியவரும். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்களுடன் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை. சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் முதல்வர் உள்ளிட்ட பலர் அமைப்பினர் பாராட்டினார்கள்
கருத்துகள்