முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக பாரம்பரிய தினச் செய்திகள்

உலக பாரம்பரிய தினத்தில், ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் IRCTC நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் இணைந்து தேசிய ரயில் அருங்காட்சியகத்திற்கான ஆன்லைன் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தினர்


ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நிறுவனத்துடன் இணைந்து தேசிய ரயில் அருங்காட்சியகத்திற்கான இணையதள பயணச்சீட்டு முறையை  அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. உலக பாரம்பரிய தினத்தையொட்டி தேசிய ரயில் அருங்காட்சியகத்திற்கான இணையதள பயணச்சீட்டு முறையை ரயில்வே வாரியத்  தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.வி.கே.திரிபாதி ரயில்வே வாரிய செயலாளர் திரு ஆர்.என். சிங்,முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார். 



தேசிய ரயில் அருங்காட்சியகம், இந்திய இரயில்வேயின் 169 வருட பாரம்பரிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. ரயில்வே வளாகத்தின், விரிவான வெளிப்புற கேலரியில் பலவிதமான நீராவி, டீசல் மற்றும் மின்சார இன்ஜின்கள் மற்றும் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட பெட்டிகள், வேகன்கள், வண்டிகள், கவச ரயில்கள், ரயில் கார்கள் மற்றும் ஒரு டர்ன்டேபிள் ஆகியவற்றின் கவர்ச்சிகரமான சேகரிப்புகள் உள்ளன. உள்ளரங்கில் உள்ள கேலரியில்  கலந்துரையாடல், ஆரம்பகால போக்குவரத்து முறைகள் தொடர்பான காட்சிகள் மற்றும் மாதிரிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜாய் மற்றும் டாய் ரயில் சவாரி, முப்பரிமாண மெய்நிகர் கோச் சவாரி, நீராவி, டீசல் மற்றும் எலக்ட்ரிக் என்ஜின் சவாரி என பல்வேறு சவாரிகள் உள்ளன.

ஒரே தேசமாக இந்தியாவை ஒன்றிணைப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்திய இரயில்வே எவ்வாறு உதவியது என்பதை எடுத்துக் காட்டுவதன் மூலம் தேசிய ரயில் அருங்காட்சியகம் ஆண்டுதோறும்  சுமார் 05 லட்சம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

தில்லியின் சிறந்த பொது மற்றும் தனியார் அருங்காட்சியகங்கள் மற்றும் கேலரிகளுக்கு இணையாக தேசிய ரயில் அருங்காட்சியகத்தை  கொண்டு வரும் வகையில் காத்திருப்பு நேரத்தை குறைப்பது உள்ளிட பிற நன்மைகளை வழங்கும் நோக்கில் இந்த இணையதள பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அருங்காட்சியகம் செவ்வாய் முதல் ஞாயிறு வரை (காலை 10:00 மணி முதல் மாலை 17:00 மணி வரை) திறந்திருக்கும்.  பார்வையாளர்கள் www.nrmindia.org என்ற இணையதளம் வாயிலாக பயணச்சீட்டை பெற முன்பதிவு செய்து கொள்ளலாம்.         மற்றும்  உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னை வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஏ. ஆர். ராகுல்நாத் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்பட கண்காட்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், வருங்கால தலைமுறைகளுக்கு நாம் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதித்து அதன் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டியது நம் கடமை எனவும், பள்ளி மாணவ, மாணவிகள் புராதன சின்னங்களில் வரலாறுகளைத் தெரிந்து அதனை பாதுகாப்பது அவர்களது கடமை எனவும் தெரிவித்தார்.  மேலும், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் 3 பேட்டரி கார் வாகன வசதியை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் இந்திய  தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து,  மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...